அருள்மிகு ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் திருக்கோவில் (போளூர்)
God Name : ஸ்ரீ நரசிம்மப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
வேலூர்
Call : +91-
புலஸ்தியரும் அவரது சகோதரரான குலஸ்தியரும் இங்குள்ள ஆனை குகையில் தங்கி தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. பெருமாளின் கிருபையால் அவர்களுக்கு ஒரு மாங்கனி கிடைத்ததாம். அதை யார் உண்ணுவது எனத் தர்க்கத்தில் ஈடுபட்டனர் எனவும் செவி வழி கதை ஒன்று உள்ளது. ஞானானந்த ஸ்வாமிகள், விட்டோபா சித்தர், அச்சுததாசர் ஆகியோர் இத்தலத்திலுள்ள குகைகளில் தியானத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எதிரே உள்ள சப்தகிரி மலையில் சப்த ரிஷிகளும் தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. சேகர் பட்டாச்சாரியார் காலை 4.30 மணிக்கே மலை மீதேறி பூஜைகளைத் தொடங்கிவிடுகிறார். பின்னர் காலை 8.30 மணிக்குக் கீழே வந்து அடிவாரத்திலுள்ள பெருமாள் கோவிலுக்கு ஆராதனை செய்கிறார். மீண்டும் மாலை மலைக்குச் சென்று பூஜைகளைச் செய்கிறார். அவர் இல்லாத சமயங்களில் சௌக்கிதார் ஒருவரை வைத்திருப்பதால், சேவார்த்திகள் பெருமாளைச் சேவிக்கலாம் என்று குறிப்பொன்று கூறுகிறது.
ஜவ்வாது மலையின் தொடர்ச்சியான சம்பத் குன்றின் 840 படிகளை ஏறி கடக்க வேண்டிய மலைக்கோவில் இது. மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் தெற்கே திருமுக மண்டலம் கொண்டு எழுந்தருளியுள்ளார். இவர் மிகுந்த வரப்பிரசாதி எனக் கூறுகின்றனர். கனகவல்லித் தாயார் உடன் எழுந்தருளியுள்ளார். மலை மீது இரண்டு நீர்ச்சுனைகளும் உள்ளன. மலை மீதுள்ள பிரம்ம தீர்த்தத்தை திருவாராதனைக்கு உபயோகிக்கின்றனர். மலையடிவாரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி சேவை சாதிக்கின்றார். அடிவாரத்தில் புலஸ்தியர் சுனை உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.