அருள்மிகு மல்லிகார்ஜுணேஸ்வரர் திருக்கோவில் (பர்வத மலை)

God Name : மல்லிகார்ஜுணேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

வேலூர்

Call : +91-

5500 ஏக்கர் பரப்பளவும், நான்காயிரம் அடி உயரமும் கொண்ட மலை. ஏழு சடைப்பிரிவுகளான மடிப்புகள் கொண்ட மலை. (கடலாடி பகுதி) மெத்தக மலை, குமரிமேட்டு மலை, கடப்பாறை மலை, கனகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய மலைகளை உள்ளடக்கியது. சிவபெருமானின் திரிசூலம் போல தோற்றமளிப்பதால் திரிசூலமலை என்ற பெயரும் உண்டு. ஆஞ்சநேயர் எடுத்துக் கொண்டு சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இங்கு விழுந்து பர்வத மலையானது என்பர். சிவபெருமான் இமயத்திலிருந்து தென்னகம் வருகையில் முதல் அடி எடுத்து வைத்த மலை எனக் கூறுவர். பார்வதி தேவி தவம் மேற்கொண்ட மலை என்பதால் பர்வதம் என்ற பெயர். பர்வதம் என்றால் மலை என அர்த்தம். பர்வதமலை என்றிருப்பதால் மலைக்கெல்லாம் மலை என்றாகிறது. குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர் என்ற இரண்டு சித்தர்கள் கருநொச்சி உண்டு இளமையுடன் வாழ்ந்ததாக குறிப்பொன்று கூறுகிறது. இன்றளவும் பல சித்தர்கள் இரவில் வந்து வழிபடுவதாக ஐதீகம். மகான் மௌனயோகி விடோபானந்தா குருஜியின் மடம், இங்கு வரும் யாத்ரிகர்களுக்கு பலவித சேவைகளை செய்து வருகிறது. தங்கும் வசதி, சாப்பிடும் வசதி ஆகியன ஏற்படுத்தி தருகிறார்கள். ஸ்ரீதர் ஸ்வாமிகள் கவனித்துக் கொள்கிறார். தொடர்பிற்கு: 94862 68396, 96885 05403.
அடிவாரத்திலிருந்து சிறிது தூரம் சமவெளியான இடத்தைக் கடந்து, பின்னர் படிக்கட்டுக்கள், கரடுமுரடான பாதைகள் கடந்து போக வேண்டும். அடுத்து வரும் மலையின் பாதை ஓரத்தில், சங்கிலிகளைப் பிணைத்த இரும்பு கம்பிகள் நட்டுள்ளனர். அதைப் பிடித்துக் கொண்டு ஏற வேண்டும். முதல் மலையை ஏறி கடப்பது மிகவும் சிரமமான விஷயம். இரண்டாவது மலை சுலபம். மூன்றாவது மலை மிகவும் செங்குத்தாக இருக்கும். உள்ளூர்க்காரர்களின் துணை இருந்தால் மலைவழியைப் பின்பற்றுவது எளிது. கடப்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாசப்படி ஆகிய படிகள் காணலாம். நடுநடுவே பாதாளம், தொங்கு பாலம் ஆகியன கடந்து போக வேண்டும். பலவிதமான மூலிகைகளும், மணம் பரப்பும் மலர்களும், இதமான காற்றும் மலை ஏறும் சிரமம் தெரியாமல் இருக்க உதவுகிறது. மூலவர்: மல்லிகார்ஜுணேஸ்வரர், அம்பாள்: பிரம்மராம்பிகை. மூலவரான மல்லிகார்ஜுணேஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார். தேஜோமய லிங்கம். கற்பூர ஆரத்தியில் சிவலிங்கமும், அதில் நாகம், சூலம், உடுக்கை ஆகிய பிம்பங்களும் தெரிகின்றன. நாமே அபிஷேகம்/அர்ச்சனை செய்யலாம். அம்பாள் பிரம்மராம்பிகை எனப்படும் பர்வத வர்த்தினி மிகுந்த வரப்பிரசாதி. இவளது ஆகர்ஷண சக்தி அளவில்லாதது என்கின்றனர். இரவு நேரங்களில் அன்னையின் கன்னத்தில் ஜோதி ஒளி காணலாம். அம்பாளைப் பார்த்துக் கொண்டே பின்னோக்கி நடந்தால், அம்பாளின் திருமேனி உயரமாகவும், நேரில் வருவது போன்றும் இருக்கும். சஞ்சீவி விநாயகர், வீரபத்ரர், மகாகாளி சன்னிதிகள் உள்ளன. பௌர்ணமி தினங்களில் இரவு நேரங்களில், சித்தர்கள் அரூபமாக வந்து தேவியை தரிசிப்பதாக கூறுகின்றனர். ஓர் இரவு வேளையாவது மலையில் தங்கி விட்டு செல்வது விசேஷம் எனக் கூறுவர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.