அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவில் (ஏரிக்குப்பம்)
God Name : சனீஸ்வர பகவான்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
வேலூர்
Call : +91-
ராஜநாராயண சம்புவராயரின் படைத்தளபதியான வையாபுரி சென்று கொண்டிருந்த குதிரை இடறி விழுந்து, தளபதியின் கால் முறிந்தது. குதிரைக்கும் காயம் ஏற்பட்டது. ஜோதிடர்களின் யோசனைப்படி, யந்திர வடிவில் சனீஸ்வரரின் வடிவம் ஒன்றை ஸ்தாபித்து, பூஜித்து வந்தான். சனீஸ்வரரின் அருளால் அவனும், குதிரையும் நலம் பெற்றனர். காலப்போக்கில் புதர்களால் மூடப்பட்ட சிலாரூபம், தொல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அதே இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டதாக, ஸ்தல வரலாறு கூறுகிறது. இக்கோவிலுக்கருகே பாஸ்கர தீர்த்தம் எனும் குளமும், 1 கி.மீ. தூரத்திலுள்ள பார்வதி அகரம் எனப்படும் கிராமத்தில் காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலும் உள்ளன.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவான் மிகுந்த வரபிரசாதி, உருவமாக இல்லாமல், யந்திர வடிவில் சிலா ரூபமாக தரிசனம் தருகின்றார். ஐந்தரை அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட சிலா ரூபம். ஓர் உயரமான கல்லின் மேல் பாகத்தில், வலப்புறம் சூரியனும் - இடப்புறம் சந்திரனும் நடுவே காகமும் பொறிக்கப்பட்டு, கீழே யந்திர வடிவமும், பன்னிரு இதழ்கள் கொண்ட தாமரையும், நடுவே ஷட்கோணமும், ஷட்கோணத்தின் ஆறு முனைகளிலும் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஷட்கோணத்தில் சனீஸ்வரரின் பீஜாட்சர மந்திரமும், யந்திரத்தின் கீழே லட்சுமி கடாட்ச மந்திரமும், பஞ்சபூத ஆகர்ஷண மந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன. சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரர் ஆகியோர்க்கான மந்திரங்கள், இடம்-வலமாக உள்ளன. (கண்ணாடியை முன்னால் வைத்து பார்த்தால் எழுத்துக்களை நேரே படிக்கலாம்) அன்னை சாயா தேவியின் யந்திரத்தை பூமியில் புதைத்துள்ளனர். வரசித்தி விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். சனிக்கிழமைகளில் சனி ஹோரையில் (காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை) அஷ்ட திரவிய அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.