அருள்மிகு ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி திருக்கோவில், படவேடு
God Name : ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
வேலூர்
Call : +91-
2500 அடி உயரமுள்ள கோட்டைமலை என அழைக்கப்படும் ராஜகம்பிர மலையில் ஆலயம் அமைந்துள்ளது. 350 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். இது அத்திமலைக்குன்று என்றும் அழைக்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கையில் புல்லாங்குழல் வைத்துள்ளார். ஸ்ரீ ருக்மணி மற்றும் சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர். அழகான திருவுருவங்கள். புரட்டாசி மாதத்தில் சூரியனின் கிரணங்கள் ஸ்வாமியின் பாதாதி கேசத்தில் படர்வது பார்க்க ஆனந்தமாய் இருக்கும். சனிக்கிழமை மட்டுமே கோவில் திறந்திருக்கும். காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை. 1500 ரூபாய் பணம் கட்டினால் திருமஞ்சனம் செய்யும் உபயதாரராக இருக்கலாம். மலை மீது ட்ராக்டரில் பயணிக்க முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.