அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோவில் (களாம்பாக்கம்)
God Name : ஸ்ரீ நாகேஸ்வரன்
காஞ்சிபுரம்
Call : +91-
அபராஜித பல்லவன் ஆசையாக கட்டிய கோவில். கஜப்பிருஷ்ட விமான அமைப்புடன் கட்டப்பட்ட தூங்கானை மாடக் கோவில். உருண்டைத் தூண்களுடன் காணப்படும் அழகிய முகமண்டபத்தில், நடராஜர், சந்திரசேகரர், பிள்ளையார் ஆகியோரின் திருவுருவங்களை புடைப்பு சிற்பங்களாக காணலாம். தாங்கி பிடிக்க பிடிப்பு ஏதுமின்றி, ஒரு வளைவான அமைப்பை, ஒரு பெரிய யானை படுத்திருப்பதைப் போல அமைத்திருப்பது ஆச்சர்யமான ஒன்று. கருவறையின் மேலுள்ள ஓர் இடைவெளியின் வழியே பார்த்தால், இந்த அருமையான வேலைப்பாட்டின் தனித்தன்மை தெரியும்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ நாகேஸ்வரன் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். கல்வெட்டுக்களில் இவருடைய பெயர் 'தளி உடையார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ தேவி, பூதேவி சகிதமாக திருமால் தரிசனம் தருகின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.