அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு
God Name : இல்லை
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
வேலூர்
Call : +91-
காசியை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு நீண்ட காலமாக குழந்தை செல்வம் இல்லாது வருந்தியவனுக்கு, இறைவன் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ரேணுகை என்ற பெயர் கொண்டு வளர்ந்து வந்தாள். மந்திரிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சாமுண்டி எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இத்தலத்தில் உள்ள ஜமதக்னி எனும் முனிவரே ரேணுகைக்கு கணவர் ஆவார் என்ற அசரீரி வாக்குப்படி, ரேணுகையும் அவளது தோழியும் ஜமதக்னியின் ஆஸ்ரமம் சென்றனர். ரேணுகையின் பணிவிடைகளில் மகிழ்ந்த ஜமதக்னி முனிவர், அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் பரசுராமர். ஜமதக்னியின் சீடனான அகிர்தவருணன் என்பவன், சாமுண்டியை செங்குவளை மலர் மாலையால் கட்டி நதிக்கரையில் ஸ்தாபித்தார். இங்கு சாமுண்டி தரிசனம் தருகின்றாள். (தற்போது புஷ்பகிரி என அழைக்கப்படுகிறது). ஒரு நாள் ஆற்றில் நீராடிக்கொண்டிருக்கையில், வானில் சென்ற கந்தர்வன் உருவத்தைக் கண்டு, ஆற்றில் தண்ணீர் பிடிக்க முடியாமல், ஒரு கணம் தடுமாறியதால், மகன் பரசுராமரை அழைத்து, ரேணுகையின் தலையை வெட்டி எடுத்து வருமாறு பணிக்கிறார். தந்தையின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, தாயின் தலையை வெட்டி எடுத்து வந்த பரசுராமர், பரிசாக தாயின் தலையையே மீண்டும் தரவேண்டும் எனக் கேட்கிறார். தாயை மீண்டும் உயிர்ப்பித்து தர வேண்டிய பரசுராமர், அவசரத்தில் துர்முகி என்பவளின் உடலில், தாயின் தலையைப் பொருத்தி விடுகிறார். பொருத்தப்பட்ட உருவத்துடனேயே கணவர்க்கு பணிவிடை செய்கிறார் ரேணுகை. கார்த்தவீர்யனின் குமாரர்களும் அவனது படைகளும், ஜமதக்னி முனிவரின் ஆஸ்ரமம் வந்தபோது, அங்கிருந்த காமதேனு பசுவை கேட்க, முனிவர் அதை தர மறுக்க, நடந்த போரில், ஜமதக்னி முனிவரைக் கொன்றுவிட்டு, காமதேனுவை கவர்ந்து செல்கின்றனர். இறந்த முனிவருடன் உடன்கட்டை ஏறினாள் ரேணுகை. அப்போது மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு, எரியும் உடல் அணைந்து, தீக்காயங்களுடன் இருந்த ரேணுகையை ஒரு மூதாட்டி காப்பாற்றினாள். பின்னர் பார்வதி தேவியின் அருளால் ரேணுகா பரமேஸ்வரியாக கோவில் கொண்டாள் என ஸ்தல வரலாறு. ரேணுகை, பரசுராமர் ஆகிய மூவரும் சிவபெருமானை வணங்கினர். ரேணுகையின் உடல் ஜமதக்னி முனிவருடன் வானுலகு சென்றது. சிரசு மட்டும் பூவுலகில் நிலை பெற்றது என ஸ்தல வரலாறு. ஜமதக்னி முனிவர் தவம் செய்த மலை அருகே உள்ளது. கமண்டல நதியின் உற்பத்தி ஸ்தானமான அந்த இடத்தில் காணப்படும் மண், விபூதியைப் போலவே உள்ளது. ஆனித் திருமஞ்சனத்தன்று விசேஷ பூஜைகள் செய்து, வெட்டி எடுத்து வரும் விபூதியை பிரசாதமாக வழங்குகின்றனர். சக்தி ஸ்தலம்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ரேணுகாம்பாள் சிரசு வடிவமாக மட்டும் தரிசனம் தருகின்றாள். சுயம்புவான தோற்றம். பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மும்மூர்த்திகளும் அரூபங்களாக எழுந்தருளியுள்ளனர். சிரசுவிற்கு பின்புறம் சுதை வடிவம் கொண்ட அன்னை தரிசனம் தருகின்றாள். அத்தி மரத்தால் உருவான திருவுருவம் என்பர். ரேணுகாம்பாளின் விழிகள் நம்மையே பார்ப்பது போன்று இருக்கின்றது. பச்சரிசி மாவு, வெல்லம், இளநீர், பானகம் ஆகியன விசேஷ நைவேத்யங்கள். ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கத்தையும் ஜனகார்ஷண சக்கரத்தையும் தரிசிக்கலாம். பரிவார தேவதைகளாக பிள்ளையார், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன் மற்றும் கோஷ்ட மூர்த்திகளைக் காணலாம். சோமநாத ஈஸ்வரர், உமா மகேஸ்வரி தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். ரேணுகா தேவி பரசுராமருக்கு உபதேசிக்கும் காட்சி சிற்ப வடிவமாக இடம் பெற்றுள்ளது. ஜமதக்னி முனிவர் தவம் மேற்கொண்ட கமண்டல நதிக் கரையிலிருந்து ஆனித் திருமஞ்சனத்தின்போது சாம்பல் எடுத்து வந்து விநியோகிக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.