அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் (வாழப்பந்தல்)
God Name : காமாட்சி அம்மன், பாபவிநாசகர் (சிவலிங்கம்)
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
வேலூர்
Call : +91-
பரமசிவனோடு எப்போதும் இணை பிரியாதிருக்க, இடபாகம் தர வேண்டுகிறாள் பார்வதி தேவி. திருவண்ணாமலையில் தவம் மேற்கொள்ளுமாறு பணித்தார். திருவண்ணாமலை செல்லும் வழியில் இத்தலத்தில் பூஜை மேற்கொள்ளவிருந்த உமையவளுக்காக தீர்த்தம் கொண்டு வர விநாயகரும் முருகனும் சென்றனர். அவர்கள் வர நேரமானதால், உமையவள் தனது கை பிரம்பினால் பூமியில் அடித்து நீரை வரவழைத்தாள். விநாயகரும் முருகனும் கொண்டு வந்த நதிகளோடு சேர்த்து 'முக்கூட்டு நதி' எனும் பெயரில் இங்குள்ளது. அன்னை வழிபட்ட இடத்தில் உயரமான பாணத்துடன் கூடிய சிவலிங்கம் உள்ளது. கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகே பர்ணசாலை ஒன்று அமைத்து, புறக்காவலாக சப்த மாதர்களையும், உட்புறம் விநாயகரையும், வாசல்களில் பைரவர்களையும் காவல் காக்குமாறு பணித்து, தவத்தை மேற்கொண்டாள் பார்வதி தேவி. அன்னை பூஜை செய்ய ஏதுவாக, மைந்தனாகிய முருகன், தனது வேல் கொண்டு ஒரு ஆற்றை உருவாக்கினார். தாய்க்காக சேய் அமைத்த ஆறு 'சேயாறு' எனப் பெயர் கொண்டது. காலப்போக்கில் மருவி 'செய்யாறு' என்றானது. அன்னை இளைப்பாற வாழைப் பந்தல் ஒன்றும் முருகனால் அமைக்கப்பட்டது. இதனால் இவ்வூர் 'வாழைப்பந்தல்' எனப் பெயர் பெற்று, தற்போது 'வாழப்பந்தல்' எனப்படுகிறது. வரமுனி எனும் முனிவராக இருந்தவர் சாபத்தினால் எருமைத்தலை கொண்டு மகிஷாசூரனாக திரிந்து அட்டகாசங்கள் செய்து வந்தான். சிவலிங்கத்தை கையில் வைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த மன்னத ரிஷியை விழுங்கி விட்டான். சிவலிங்கம் அவனது கண்டத்திலேயே நின்று விட்டது. மகிஷாசூரனும் அவனது படைகளும், தபோவனத்தை அழிப்பதிலும், தவத்திற்கு இடையூறு விளைவிப்பதிலுமான தகாத காரியங்களில் ஈடுபட்டனர். பல வடிவங்களில் வந்து போரிட்ட அவனை அடக்குவது சற்று சிரமமாக இருந்தது. தனது நிஜத்தலையான எருமைக் கடா தலையுடன் வந்ததும், அவனது தலையை வெட்டி காலில் போட்டு மிதித்து அழித்தாள் துர்க்கை. அவனது கண்டத்தில் இருந்த சிவலிங்கத்தை கொண்டு வந்து பார்வதியிடம் சேர்க்கிறாள் துர்க்கை. சிவலிங்கத்தை பார்வதி கையில் வாங்கியதும், கையோடு ஒட்டிக் கொண்டது. துர்க்கை தனது 'கட்கம்' எனும் வாளால் பூமியை கீறி நவதீர்த்தங்களை வரவழைத்தாள். அது 'கட்க தீர்த்தம்' எனப் பெயர் கொண்டது. சில காலம் அதில் நீராடிய பார்வதி, மகிஷாசூர வதத்தினால் கொண்ட தோஷங்களைப் போக்கிக் கொண்டாள். கையில் ஒட்டிக்கொண்டிருந்த லிங்கமும் விலகியது. அதனை கரை மீது பிரதிஷ்டை செய்து 'பாபவிநாசகர்' எனப் பெயரிட்டு பூஜித்து வந்தாள் என ஸ்தல வரலாறு. கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று, கேட்ட அசரீரியின்படி, பார்வதி தேவி மலையைச் சுற்றி கிரிவலம் வந்து, அதே இடம் திரும்பியதும், சிவபெருமான் அவளை அழைத்து, தனது மேனியின் இடது பாகத்தை அளித்தார் என ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஆதி காமாட்சி அம்மனாகிய பச்சை அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. கையில் ஒட்டிக்கொண்ட சிவலிங்கத்துடன் காட்சி தருகின்றாள். பேரெழில் கொண்டு தரிசனம் தரும் அழகு திருவுருவம். சண்டன், முண்டன் துவாரபாலகர்களாக உள்ளனர். அன்னை பிரதிஷ்டை செய்த சிவலிங்க மூர்த்தம் 'பாப விநாசகர்' எனும் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். 'மன்னாதீஸ்வரர்' என்றும் கூறுவர். வெளியே பிரம்மாண்டமான திருவுருவங்களாக வரமுனி மற்றும் செம்முனி, யானை, குதிரை ஆகிய சுதை வடிவங்களைக் காணலாம். வலச்சுற்றில் ஜமதக்னி, நவ வீரர்கள், சப்த ரிஷிகள், துவார கணபதி, தேவேந்திரன் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.