அருள்மிகு தாலபுரீஸ்வரர் திருக்கோவில் - திருவன்பார்த்தன் பனங்காட்டூர் (பனங்காடு)

God Name : ஸ்ரீ தாலபுரீஸ்வரர் மற்றும் ஸ்ரீ கிருபாநாதேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

வேலூர்

Call : +91-

ஆதியில் பனைமரக் காடாக இருந்தமையால் பனங்காடு எனப் பெயர் கொண்டது. வன்பாக்கத்திற்கு (வெண்பாக்கம்) அருகில் இருந்ததால் வன்பார்த்தன் பனங்காட்டுர் என்றானது. தாலம் என்றால் பனைமரம் எனப் பொருள். பனைமரத்தினடியில் எழுந்தருளியதால் இவ்விறைவனுக்கு தாலபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது. பிரம்மாவின் மானஸ புத்திரர்களில் ஒருவரான புலஸ்தியர், தனது மகனான அகஸ்தியர் வழிபட்ட, சுயம்பு லிங்கமான ஸ்ரீ தாலபுரீஸ்வரர் இருக்கும் பனங்காட்டிற்கு வந்தார். எவ்வளவு தேடியும் அவரது கண்களுக்கு ஸ்வாமியின் தரிசனம் கிட்டவில்லை. தேடும் முயற்சியை கைவிட்டு, தாமே லிங்கம் ஒன்றை அமைத்து வழிபடலானார். பிரஜாபதிகளுள் ஒருவரும், சப்த ரிஷிகளுள் ஒருவருமான புலஸ்தியருக்கு, அகஸ்தியர், விஸ்ரவா என்று இரண்டு மகன்கள். விஸ்ரவாவுக்கு இத்விதா எனும் முனிகுமாரத்தியின் மூலமாக பிறந்தவன் குபேரன். விஸ்ரவாவின் இன்னொரு மனைவி கேசி என்பவளுக்கு பிறந்த பிள்ளைகளே ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன். புலஸ்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமே கிருபாநாதேஸ்வரர். கோவிலின் எதிரே ஜடாகங்கை தீர்த்தக் குளம். குளக்கரையில் கங்கா தேவியின் சிலை. இங்கு எதிரொலி கேட்கின்றது. ஒரே பனைமரத்தின் விதையிலிருந்து முளைத்த இரண்டு பனைமரங்கள். ஒன்று ஆண், மற்றொன்று பெண். இரண்டையும் பிரகார வலச்சுற்றில் பார்க்கலாம். அகஸ்தியர் வழிபட்ட காலத்தில் பனம்பழங்களை நைவேத்யம் செய்து வந்தாராம். இப்போதும் (கிடைக்கும் சமயங்களில்) பனம்பழ நைவேத்யம் தொடர்கின்றது.
மூலவர்: ஸ்ரீ தாலபுரீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ அமிர்தவல்லி. மூலவர்: ஸ்ரீ கிருபாநாதேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ கிருபா நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ தாலபுரீஸ்வரர். வட்ட வடிவ ஆவுடையும், பெரிய பாணமும் கொண்ட சுயம்பு மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி. அகஸ்தியர் வழிபட்டு பூஜித்த லிங்கம். கருவறையின் வாசலிலுள்ள துவாரபாலகர்களின் அருகே ஒரு பக்கம் அகஸ்தியரின் திருவுருவமும் மறுபக்கம் ஸ்தலவிருட்சமான பனைமரமும் கற்சிற்பங்களாக காணலாம். தாலம் என்றால் பனைமரம் எனப் பொருள். பனைமரத்தினடியில் எழுந்தருளியதால் இவ்விறைவனுக்கு தாலபுரீஸ்வரர் என்று பெயர். பனங்காட்டீசர், பனங்காட்டு நாதர் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. தாலபுரீஸ்வரருக்கு மாசி மகம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. முதலில் ஸ்ரீ தாலபுரீஸ்வரரை வழிபட்டு பின்னர் ஸ்ரீ கிருபாநாதேஸ்வரரை வழிபடுவது இங்கு சம்ப்ரதாயமாக உள்ளது. இரண்டு மூலவர்களையும் வழிபட்டு பின்னர் சேர்த்தே பிரதட்சிணம் செய்யலாம். தாலபுரீஸ்வரரின் சந்நிதியின் எதிரில் - புருஷா மிருகம், ஏகபாத மூர்த்தி, நால்வர் ஆகிய திருவுருவங்களை மண்டபத் தூண்களில் காணலாம். தாலபுரீஸ்வரர் சந்நிதிக்கு வடக்கில் ஸ்ரீ கிருபாநாதேஸ்வரர் சந்நிதி கொண்டுள்ளார். சதுர பீட ஆவுடையாரில் குட்டையான பாணம் கொண்டு தரிசனம் தருகின்றார். புலஸ்தியர் வழிபட்ட லிங்கம். கிருபாநாதேஸ்வரருக்கு கார்த்திகை சோமவாரம் விசேஷம். இவரது சந்நிதியின் எதிரில் உள்ள மண்டபத் தூண்களில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் அருமை. வாலியும்-சுக்ரீவனும் போரிடும் சிற்பம் வியக்கத்தக்கது. ஸ்ரீ தாலபுரீஸ்வரரின் நாயகியான ஸ்ரீ அமிர்தவல்லி தனி சந்நிதி கொண்டுள்ளார். சதுர் புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனியுடன் நின்ற கோலத்தில் தரிசனம் தருகின்றாள். தெற்கு பார்த்த சந்நிதி. ஸ்தூல கோமள மரகதாம்பிகை என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ கிருபாநாதேஸ்வரரின் நாயகியான ஸ்ரீ கிருபாநாயகி சதுர் புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனியுடன், தெற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். பிரகார வலச்சுற்றில் - பக்கத்து பிள்ளையார், மீனாட்சி-சொக்கர், நடராஜ சபை, பைரவர், உற்சவ மூர்த்தங்கள் ஆகியன தரிசிக்கலாம். வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான் திருவுருவம் அழகாக இருக்கின்றது. மயிலின் முகம் திசை மாறியுள்ளது. இந்த ஊரின் ஆதி தெய்வமான கோட்டை முனீஸ்வரர் எனப்படும் யோகானந்த முனீஸ்வரர் கோவிலுக்கு வெளியே எழுந்தருளி தரிசனம் தருகின்றார். வன்னி மரமும், மரத்தடியில் நாகப்பிரதிஷ்டைகளையும் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.