அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோவில், காஞ்சிபுரம்

God Name : சித்ரகுப்தர்

இஸ்கான் கோயில்

Call : +91-

யமதர்மன் சிவபெருமானிடம் சென்று ஆன்மாக்களின் ஆயுள் வரம்பு, பாவ புண்ணியங்கள் கணக்கிட உதவியாளர் வேண்டும் என முறையிட்டார். அதன்படி சூரிய பகவானுக்கும், கடல் மங்கை நீளாதேவிக்கும் பிறந்த குழந்தையான சித்ரகுப்தனை உதவியாளராக நியமிக்கின்றார். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் இப்பெயர் வந்தது. அழகும், அறிவும், தெய்வாம்சம் கூடியதுமான தோற்றம் கொண்டவர். எமனின் நகரமான வைவஸ்வத நகரில் யமனுக்கு உதவியாக பாப புண்ணிய கணக்குகளை எழுதி வருகிறார். விஸ்வப்ராமணரின் மகள் கர்ணிகை, பிரபாவதி மற்றும் லீலாவதி என இவருக்கு மூன்று மனைவிகள். 'சித்ரம்' என்பது நாம் செய்யும் பாவங்களைக் குறிப்பதாகவும், 'குப்தன்' என்பது பதிவேட்டில் பதிவு செய்து தண்டனை தருபவன் என்றும் விளக்குவதாக ஒரு குறிப்பு கூறுகிறது.
மூலவர்: ஸ்ரீ சித்திரகுப்தர்் அம்பாள்: ஸ்ரீ கர்ணிகை. மூலஸ்தானத்தில் மூலவர் ஸ்ரீ சித்திரகுப்தர் இடது கையில் ஓலைச்சுவடிகளையும், வலது கையில் எழுத்தாணியையும் கொண்டு, தெற்கு பார்த்த வண்ணம் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். நின்ற கோலத்தில் காணப்படும் உற்சவத் திருமேனி அழகாக இருக்கின்றது. கேது கிரகத்தின் அதிபதி என்பதால், கேது அம்சமாக வலது தோளுக்கு மேலே நாகம் உள்ளது. செல்வ கணபதி, விஷ்ணு துர்க்கை, ஐயப்பன், நவக்கிரகங்கள், இராமலிங்க அடிகளார் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.