அருள்மிகு ஷோடஸி அம்மன் திருக்கோவில் (தென்னாங்கூர்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட பீடங்களுள் ஒன்று ஜ்யோதிர்மடம். இது பத்ரிநாத் அருகேயுள்ளது. இதன் ஆறாவது
பீடாதிபதி ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகள். இவர் 1974 ஆம் ஆண்டு மகாசமாதி அடைந்தார்.
ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளுக்கு, இங்கு ஒரு சந்நிதி ஏற்படுத்தி, நித்ய வழிபாடுகள் செய்கின்றனர். இவர் ஜ்யோதிர்
மடத்தைச் சேர்ந்த சிவரத்ன கிரி ஸ்வாமிகளின் சிஷ்யர்.
மகாஷோடஸி சந்நிதி:
ஆதிசங்கரரின் ஆறு மார்க்கங்களையும் தன்னுள் அடக்கி, நடு நாயகமாக வீற்றிருக்கின்றாள் மகாஷோடஸி.
இரண்டு பக்கங்களிலும் லட்சுமி-சரஸ்வதி வெண்சாமரம் வீச, பரிவார தேவதைகளுடன் எழுந்தருளியுள்ளார்.
முப்பெருந்தேவியரின் அம்சமாக அமர்ந்திருக்கும் மகாஷோடஸி அன்னை, தனது பன்னிரெண்டு கரங்களில் -
வீணை, மாணிக்கமாலை, புஸ்தகம், அங்குசம், கரும்புவில், பாசக்கயிறு, பஞ்ச புஷ்ப பாணங்கள், அபய-வரத
முத்திரைகள் ஆகியன கொண்டு தரிசனம் தருகின்றாள்.
அங்க-ப்ரத்யங்க தேவதைகளான முப்பத்தி இரண்டு பரிவாரங்களுடன் அன்னை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி, அன்னபூரணி, அஸ்வரூடா, ராஜமாதங்கி, வாராஹி, சூலினி, ப்ரத்யங்கிரா, சரபேஸ்வரர்,
சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், அகோரமூர்த்தி, வனதுர்க்கை, மேதா தட்சிணாமூர்த்தி, முருகன், சப்த மாதாக்கள்
ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.