அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் திருக்கோவில் (அடையாறு - பெசண்ட் நகர்)
God Name : ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
கடலில் மிதந்து வந்த சிவலிங்க மூர்த்தத்தை, காஞ்சி மஹா பெரியவரின் யோசனைப்படி இங்கு பிரதிஷ்டை செய்து இவ்வாலயம் எழுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தலத்திலுள்ள விநாயகர் ரமண மகரிஷியால் வழிபடப்பட்டவர் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
பிரதோஷ வேளை பூஜைகள் இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றன. சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யும்போது காண்பது ஆனந்தமாக இருக்கும்.
இத்திருக்கோவிலின் மூலவர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் ஆவார். அம்பாள் ஸ்ரீ அரளாகேசி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கோஷ்டத்திலுள்ள மூர்த்தங்கள் அழகாக அமைந்துள்ளன. பிரதோஷ நாயகரான உமா ஆலிங்கன மூர்த்தியின் எழில் வடிவம் கண்களையும் மனதையும் விட்டு அகலாது. ஸ்ரீ அரளாகேசி அம்பாளின் சாந்த ஸ்வரூப வடிவம் நம்மையே பார்ப்பது போன்றும் நம்மிடம் பேசுவது போன்றும் அமைந்துள்ளது.
நந்தியம்பெருமான் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் தரிசனம் தருகிறார். மந்திர கோஷங்களை கேட்கும் பாவனையில் காதுகளைப் புடைத்துக் கொண்டும் நீட்டிக் கொண்டும் காட்சி தருகிறார்.
விநாயகப் பெருமான், வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், ஆதி சங்கர பகவத் பாதாள், ஸ்ரீ ராமர், ஸ்ரீ ஆஞ்சநேயர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை இங்கு தரிசிக்கலாம். அரசமரத்தடியில் ஸ்ரீ அரச விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.