அருள்மிகு வீரட்டகாசப் பெருமான் திருக்கோவில் (காஞ்சி)

God Name : வீரட்டகாசர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய காலாக்னி அண்டசராசரங்களையும் எரித்தது. அழியாது நின்ற காஞ்சி நகரில் எழுந்தருளி வீரமாகச் சிரித்தார் என வரலாறு. இவ்விறைவனைப் பூஜித்து பெருமாள் பவள நிறம் பெற்றார். கொங்கண முனிவர் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கும் குளிகை ஒன்றை இவ்விறைவன் மீது வைத்தார். சிவலிங்கம் தன்னுள் குளிகையை ஐக்கியப்படுத்திக் கொண்டது. இங்கேயே அவர் தனது தவத்தை மேற்கொண்டார் என ஸ்தல வரலாறு. சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபட்ட ஸ்தலம். அர்ச்சனை செய்ய ஏதுவாக ஏதும் கிடைக்காத நிலையில் கற்களை எறிந்து அர்ச்சனை செய்யும் பழக்கத்தைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கையில் கல்லுடன் நின்ற நிலையில் அவரது உருவமுள்ளது. சாக்கிய நாயனார் வழிபட்ட கோவில் என்றே பிரசித்தம்.
மூலஸ்தானத்தில் மூலவராக வீரட்டகாசர் சிவலிங்க ஸ்வரூபமாக மேற்கு நோக்கி எழுந்தருளி அருள் புரிகின்றார். வீரட்டானேசுவரர் என்ற பெயரும் உண்டு. ஆனந்த மேலீட்டால் ஆர்த்தெழுந்து வீரமாகச் சிரித்தபடியால் வீரட்டகாசர் எனப் போற்றப்படுகிறார். மூலவருக்கு நேராக சாளரம் ஒன்றுள்ளது. மேடையில் ஒன்றுக்கொன்று எதிராக நான்கு சிவலிங்கங்களைக் காணலாம். இடையே ஸ்ரீ நடராஜர் மற்றும் சிவாகமி அம்மையின் திருப்பாதங்களைத் தரிசிக்கலாம். உள்வாயிலில் துவார கணபதியின் தரிசனம் கிடைக்கிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.