அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோவில் (மயிலாப்பூர்)
God Name : வெள்ளீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மகாபலி மன்னன் செய்யும் வேள்வியில் தானம் பெற வந்த திருமால், தானமாக மூன்றடி மண் கேட்டார். அவர் கேட்ட தானத்தைத் தாரை வார்த்துக் கொடுப்பதற்காக கமண்டலத்து நீரை எடுத்தபோது, அதைத் தடுக்கும் நோக்கத்தில் வண்டு உருவமெடுத்து கமண்டலத்தின் வாயை அடைத்துக் கொண்டார் சுக்ராச்சாரியார்.
இதை கண்ணுற்ற திருமால், தர்ப்பைப்புல் கொண்டு கமண்டலத்தின் வாயைக் கிளறினார். இதனால் சுக்ராச்சாரியாரின் கண் பார்வை போய்விட்டது. இழந்த பார்வையை மீண்டும் பெற, இத்தலத்தில் சிவனை நோக்கி சுக்ராச்சாரியார் தவமிருந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சுக்ரனுக்கு 'வெள்ளி' என்ற பெயரும் உண்டு. வெள்ளி வழிபட்ட இறைவன் என்பதால், இவ்விறைவன் வெள்ளீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
இது சென்னையிலுள்ள சப்த ருத்ர ஸ்தானங்களுள் ஒன்று.
மூலவர்: வெள்ளீஸ்வரர், அம்பாள்: காமாட்சி.
ஆலயத்துள் நுழைந்ததும், முதல் தரிசனமாக சித்தி-புத்தி தேவியர்களுடன் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானை வணங்கி, ஆசி பெற்று வலச்சுற்றைத் தொடர்கின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக வெள்ளீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கிழக்கு பார்த்த சந்நிதி. கோஷ்டத்தில் சிவசூரியன், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, நாகேந்திரன், வீரபத்ரர், உலகளந்த பெருமாள், துர்க்கை ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். உற்சவ மூர்த்திகள் அழகாக இருக்கின்றனர்.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் காமாட்சி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வலப்புறமுள்ள சந்நிதியில் பள்ளி அறையையும், அடுத்து சோமாஸ்கந்தரையும் தரிசிக்கலாம். வலச்சுற்றிலுள்ள சந்நிதியில் முத்துக்குமாரஸ்வாமி எழுந்தருளியுள்ளார். வள்ளி-தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். அடுத்து கால பைரவரை தரிசிக்கலாம்.
ஸ்தல ஐதீகத்தை விளக்கும் வகையில், குருந்த மரத்தடியில் சிவபெருமானை வழிபடும் சுக்கிரனை தரிசிக்கலாம். லிங்க வடிவில் சுக்ரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அதை அடுத்துள்ள சந்நிதியில் நரசிம்மரின் உக்ரத்தைத் தணித்த சரபேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். பிரத்யங்கிரா தேவியும் சூலினி துர்க்கையும் காட்சி தருகின்றனர்.
தூண் ஒன்றில் ஆஞ்சநேயரின் திருவுருவம் காணப்படுகிறது. எதிரே தனி சந்நிதியில் சனிஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அடுத்துள்ள சந்நிதியில் நவகிரகங்களைத் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.