அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்

God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

ஸ்தல வரலாறு: ஸ்ரீ ராமாநுஜாச்சார்யாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, வைஷ்ணவ ஸம்ப்ரதாயம் தழைத்தோங்க உதவியவர் ஸ்ரீ வேதாந்த தேசிகன். 730 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஆச்சார்யர் இவர். உரிய காலத்தில் வித்யாப்யாசத்தைத் தொடங்கி அனைத்தையும் விரைவில் கற்றுணர்ந்தவர். திருவஹீந்திரபுரத்திற்குச் சென்ற ஸ்வாமி தேசிகன், அங்குள்ள ஔஷதகிரியில் அஸ்வத்த விருட்சத்தின் கீழமர்ந்து கருட மந்திரத்தை இடைவிடாது ஜபித்தார். பிரத்யட்சமான கருடன் ஹயக்ரீவ மந்திரத்தை அவருக்கு உபதேசம் செய்தார். அந்த மந்திரத்தைக் கொண்டு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவரை உபாசித்தார் ஸ்வாமி தேசிகன். இதனால் மகிழ்ச்சியுற்ற ஸ்வாமி, திருமுக மண்டலம் மட்டும் குதிரை வடிவத்துடன் ஸ்ரீ ஹயக்ரீவனாக சேவை சாதித்தார். 'ஹய' என்றால் குதிரை. வெண் குதிரையின் திருமுகம் கொண்டவர் ஹயக்ரீவப் பெருமான். ஸ்வாமி தேசிகன் எண்ணற்ற ஸ்தோத்திரங்களை இயற்றினார். அவற்றுள் ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம், ஸ்ரீ தேசிகப் பிரபந்தம், ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் போன்ற சிறந்த நூல்களை அருளினார். பின்னர் க்ஷேத்ராடனம் புறப்பட்டுச் சென்றார். ஸ்ரீ ராமாநுஜரின் ஸ்ரீ பாஷ்யம் மற்றும் கீத பாஷ்யம் ஆகியவற்றுக்கு விரிவுரை எழுதினார். வித்தைக்கு அதிபதியான ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடும் சேவார்த்திகள் கல்வியும் ஞானமும் பெறுவர்.
முதலில் பெரிய திருவடியை (கருடனை) சேவித்து, அனுமதியும் ஆசியும் பெற்று கோவிலுக்குள் செல்கின்றனர். மூலஸ்தானத்தில் மூலவராகவும் உற்சவராகவும் சேவை சாதிக்கும் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கம்பீரமாக அருள்பாலிக்கிறார். ஸ்ரீ வேதாந்த தேசிகரையும் சேவிக்கலாம். அடுத்துள்ள பிரதான சந்நிதியில் திருவேங்கடவனான ஸ்ரீநிவாசப் பெருமாள் சேவை சாதிக்கின்றார். ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டுள்ளார். திருக் கரங்களில் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்ற ஸ்வர்ண எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு, ஒப்பிலியப்பன் போல அற்புதமான அலங்காரத்தில் காட்சி தருகிறார். பக்கத்தில் அலர்மேல் மங்கை தாயார் சந்நிதி கொண்டுள்ளார். கஜலட்சுமி உற்சவ மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ ராமர், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், சுதர்ஸனர்/யோக நரசிம்மர், ஆண்டாள், பேயாழ்வார், ஆழ்வார்கள்-ஆச்சார்யர்கள், பாஷ்யக்காரர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோரையும் சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.