பிரம்மா நடத்தவிருந்த யாகத்தைத் தடுத்த நிறுத்த சரஸ்வதி தேவி மேற்கொண்ட பலவிதமான செய்கைகளில் ஒன்றாக அசுரர்களை ஏவிவிட்டாள். எல்லா அசுரர்களையும் தனது சக்ராயுதத்தால் சம்ஹாரம் செய்த பெருமாளின் மீது அசுரர்களின் ரத்தம் பீய்ச்சி அடித்ததால், சிவந்த நிறத்தைக் கொண்டு பவளவண்ணராகக் காட்சி தருகிறார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. பாற்கடலில் பொங்கிய விஷத்தால் திருமால் மேனி கருநிறமானது. அதை நீக்கி பொன்னிற மேனி பெற நினைத்த திருமால் காஞ்சி வந்தடைந்து, வீரட்டகாசத்தின் முன்பு தீர்த்தம் உண்டாக்கி, தாமரை மலர்களால் வீரட்டகாசரை அர்ச்சித்து வழிபட்டார். இதனால் மகிழ்ந்த வீரட்டகாசர், திருமாலுக்கு பொன்னிற வண்ணம் தந்தருளியதாகக் கூறப்படுகிறது. வைகுண்டத்திற்குச் சென்று ஸ்ரீமந் நாராயணனை தரிசிக்க முற்பட்டு அங்கு சென்ற ப்ருகு முனிவரை கவனியாது, விஷ்ணு பகவான் மஹாலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்தார். தன்னை அலட்சியம் செய்கிறார் எனக் கோபம் கொண்ட ப்ருகு முனிவர், விஷ்ணுவை காலால் எட்டி உதைத்து விடுகிறார். உதைத்த கால் வலிக்குமே எனக் கூறி விஷ்ணு பகவான் முனிவரின் காலைப் பிடித்து இதமாகத் தடவலானார். தனது தவறை உணர்ந்த ப்ருகு முனிவர், இத்தலத்திற்கு வந்து பவளவண்ணரை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம் இது. இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும்.
மூலஸ்தானத்தின் மூலவராக பவளவண்ணர், சிவந்த மேனியராக, மேற்கே திருமுக மண்டலம் கொண்டு அமர்ந்த திருக்கோலம். திருவாழி, திருச்சங்கம் ஏந்தியும், அபய வரத கரங்களுமாக சதுர்புஜங்களுடன் காட்சி தருகிறார். ப்ருகு மகரிஷி மற்றும் அஸ்வினி தேவதைகளுக்கு பிரத்யட்சமானதாக ஐதீகம். உற்சவப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்களுடனும், பேரெழில் கொண்ட திருமேனியுடனும், அதி அலங்காரனாக சேவை சாதிக்கின்றார். ப்ருகு மகரிஷியும் உடன் எழுந்தருளியுள்ளார். பரவாசுதேவரின் சிறிய மூர்த்தம், வெண்ணைக்காடிய கண்ணன் என நித்யோத்சவம் கண்டருளும் பெருமாளை சேவிக்கலாம். ஆண்டாள் திருவுருவம் அழகாகக் காட்சியளிக்கிறது. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி - சீதாதேவி - லக்ஷ்மணர் - ஹனுமன், சந்தான கோபால கிருஷ்ணன் திருவுருவங்கள் எழில் கொண்டவை. பெரிய திருவடியும் ஆழ்வார்களும் எழுந்தருளியுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.