அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோவில் (திருவேட்டீஸ்வரன்பேட்டை)
God Name : திருவேட்டீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் மேற்கொண்ட அர்ச்சுணன், வேடுவன் உருவில் வந்தவர் சிவபெருமான் என அறியாமல் அவரது தலையில் வில்லால் அடித்ததால் இறைவனின் திருமுடி மீது தழும்பு ஒன்று ஏற்பட்டது.
காடாக இருந்த இப்பகுதியை சீராக்கி ஊரை விரிவுபடுத்த முற்பட்ட நவாப்பின் ஆட்கள், கோடரியால் மரங்களை வெட்டியபோது, கோடரி அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது பட்டுவிட்டது. இதை பார்த்துக் கொண்டிருந்த நவாப்பின் மந்திரி, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினார் என வரலாறு கூறுகிறது. இந்த லிங்கத்தை கண்டெடுத்தவர் ஒரு முகமதியர். நவாப் வம்சத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு குடும்பம், அர்த்தஜாம பூஜை நைவேத்தியத்திற்கு பசும்பால் அனுப்பி வைப்பதாக ஒரு குறிப்பு கூறுகிறது.
தேவார வைப்புத்தலம்் அஷ்ட ருத்ர ஸ்தானங்களுள் ஒன்று.
மூலவர்: திருவேட்டீஸ்வரர், அம்பாள்: ஷெண்பகாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக திருவேட்டீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மூலவரின் திருமுடியின் மேற்புறம் பிளவு ஒன்று காணப்படுகிறது. இது 'பார்த்த பிரகரண லிங்கம்' என்று அழைக்கப்படுகிறது. சுயம்பு மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஷெண்பகாம்பிகை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
உட்பிரகாரத்தில் விநாயகர், பாலசுப்ரமண்யர், வீரபத்ரர், முத்துக்குமாரசுவாமி, நால்வர், பரவை - சங்கிலி நாச்சியார்களுடன் சுந்தரர், சரஸ்வதி-லட்சுமி தேவியர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். வடக்கு பிரகாரத்தில் பைரவர், விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர், ஆறுமுகன், 63 நாயன்மார்கள், அதிகார நந்தி, ராமலிங்க அடிகளார் ஆகியோரை தரிசிக்கலாம்.
63 நாயன்மார்களின் பூஜைகள் அவரவர்க்குரிய நட்சத்திர தினத்தன்று செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் 3ஆம் ஞாயிற்றுக்கிழமை அன்று 1008 போற்றி வழிபாடு நடத்தப்படுகிறது.
சத்ரு சம்ஹார திரிசதை, ருத்ர திரிசதை, நவக்கிரக பூஜை ஆகிய பூஜைகள் பிரசித்தி பெற்றவை.
நந்தவனமும் திருக்குளமும் கொண்ட ஆலயம் இது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.