அருள்மிகு பச்சைவண்ணர் திருக்கோவில் (காஞ்சி)
God Name : பச்சைவண்ணர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
ப்ருகு மஹரிஷி செய்த யாகத்தின் பலனாக, மஹாலட்சுமி புத்ரியாக அவதரித்து, பெருந்தேவி எனும் பெயருடன் வளர்ந்து, வரதராஜப் பெருமாளை விவாஹம் செய்து கொண்டதாக ஐதீகம்.
ராம அவதாரத்தில் மரீசி மகரிஷிக்கு, பச்சை வண்ண திருமேனியுடன் விஷ்ணு ரூபத்தில் பிரத்யட்சமானதாக ஐதீகம்.
மூலவர்: பச்சைவண்ணர், தாயார்: மரகதவல்லி.
மூலஸ்தானத்தில் பச்சைவண்ணப் பெருமாள் எனப்படும் மரகதவண்ணர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். ப்ருகு முனிவர்க்கும், மரீசி மகரிஷிக்கும் பிரத்யட்சமானதாக ஐதீகம்.
ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்களுடன் உற்சவப் பெருமாளான ஸ்ரீநிவாசர் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
தாயார் மரகதவல்லி தனி சன்னதியில் தரிசனம் தருகிறார். யந்திர ப்ரவாஸினி பிரதிஷ்டை செய்யப்பட்ட பீடத்தில் அமர்ந்துள்ளதால் சாந்நித்யம் அதிகம் என்பார்கள்.
மஹாலட்சுமி, சீதா தேவி, யந்திர ஸ்வரூபிணி ஆகிய மூன்று திவ்ய ஸ்வரூபங்களில் தாயார் உள்ளதாக கூறுகின்றனர்.
இங்கு காணப்படும் நாக விளக்கில் நெய் ஊற்றி தீப வழிபாடு செய்வோர்க்கு சர்ப்ப தோஷ நிவர்த்தி கிடைத்து, லட்சுமி கடாட்சம் உண்டாவதாக பெரியவர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீநிவாசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். உற்சவத் தாயார் கஜலட்சுமியாக காட்சி தருகின்றார். ஆதிசேஷன் காவலாக இருக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.