அருள்மிகு பிரசன்ன வெங்கடேச நரசிம்மப் பெருமாள் திருக்கோவில் (சைதாப்பேட்டை)
God Name : பிரசன்ன வெங்கடேசர் மற்றும் பட்டாபிஷேக ராமர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் தெற்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். சீதாப்பிராட்டி, லக்ஷ்மணன், ஹனுமன் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
மூல விக்ரகங்களாகவும் உற்சவ விக்ரகங்களாகவும் பட்டாபிஷேகக் கோலத்தில் சேவை சாதிக்கிறார். மூலவர் ராமருக்கு வலப்பக்கம் சீதை - கல்யாண கோலம்் உற்சவ ராமருக்கு இடப்பக்கம் சீதை - பட்டாபிஷேகக் கோலம். ஆஞ்சநேயர் தனி சன்னதி கொண்டுள்ளார்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். வேங்கடவனாகவும் நரசிம்மனாகவும் காட்சி தரும் அபூர்வ சிலா விக்ரகம் என்பதால் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச நரசிம்மர் என்று போற்றப்படுகிறார். சங்கு-சக்கரமும், அபய-வரத ஹஸ்தங்களும் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி.
ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். இரு தேவியர்களுடன் சேவை சாதிக்கும் உற்சவ மூர்த்தம் பேரெழில் கொண்டது.
ஸ்ரீ அலர்மேல் மங்கைத் தாயார் தனி சன்னதி கொண்டுள்ளார். மூலவர் சிலா விக்ரகமாகவும், உற்சவர் பஞ்சலோக விக்ரகமாகவும் எழுந்தருளியுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.