அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (வில்லிவாக்கம்)

God Name : அகஸ்தீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

இத்தலத்தில் தங்கி சிவபூஜை செய்து கொண்டிருந்த அகஸ்தியரை, வில்லவன்-வாதாபி எனும் இரண்டு அசுரர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். எல்லை மீறிப்போனதால் அவர்களை சம்ஹாரம் செய்து விட்டார் அகஸ்தியர். இதனால் அகஸ்தியரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபடலானார். தனது சிவபூஜைக்கு தடங்கல் ஏதும் இல்லாதிருக்க இறைவனை வேண்டினார். தொடர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருக்கையில், அவருக்கு துணை இருக்க வீரபத்ரரை அனுப்பி வைத்தார் இறைவன். காவலாக வந்த வீரபத்ரர் இக்கோவிலிலேயே தங்கி விட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அகஸ்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய ஸ்தலம். அகஸ்தியர் கொண்ட தோஷத்தையும் போக்கியருளிய ஸ்தலம். அங்காரகன் எனப்படும் செவ்வாய் இங்கு தீர்த்தம் ஒன்றை அமைத்து இவ்விறைவனை வழிபட்டு நற்பலன்களை அடைந்தார். அகஸ்தியருக்கு சிவபெருமான் காட்சி தந்த நாள் செவ்வாய்க்கிழமை என்பதாலும், அங்காரகன் வழிபட்ட ஸ்தலம் என்பதாலும், இத்தலம் செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. வில்லவன் எனும் அசுரன் வதம் செய்யப்பட்டதால், இவ்ஊரை வில்லவன்பாக்கம் என அழைத்தனர். பின்னாளில் மருவி வில்லிவாக்கம் என்றானது.
மூலவர்: அகஸ்தீஸ்வரர், அம்பாள்: ஸ்வர்ணாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக அகஸ்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். நான்கடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். அகஸ்திய மாமுனி ஸ்தாபித்து வழிபட்டதால் அகஸ்தீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். கஜப்பிருஷ்ட அமைப்பைக் கொண்ட மூலஸ்தானம். வெளியே பிள்ளையாரும் முருகனும் தரிசனம் தருகின்றனர். உற்சவ சோமாஸ்கந்தர் விக்ரஹம் அழகாக இருக்கின்றது. கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஸ்வர்ணாம்பிகை நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சந்நிதியின் வெளியே மகாலட்சுமியும் சரஸ்வதியும் தரிசனம் தருகின்றனர். அம்பாளை பார்த்தபடி குரு பகவான் எழுந்தருளியிருப்பது கூடுதல் விசேஷம். நர்த்தன விநாயகர், லட்சுமி-சரஸ்வதி-துர்க்கை, அதிகார நந்தி, சிவகாமி சமேத நடராஜப் பெருமான், சூரிய-சந்திரர்கள், வீரபத்ரர், காளி, விசாலாட்சி உடனாய விஸ்வநாதர், ஆதி சங்கரர், நால்வர், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஸ்தல விருட்சமான வில்வ மரம் ஸ்வாமிக்கு குடை பிடிப்பது போல நிற்கிறது. அதன் கிளை ஒன்று நீண்டு, நடராஜர் சந்நிதிக்கும் குடை பிடிக்கின்றது. மரத்தடியில் வில்வ நாயகி - மகாலட்சுமி எழுந்தருளியிருப்பது கூடுதல் விசேஷம். விசேஷ நாட்களில் அம்பாளுக்கு தங்க பாவாடை சாத்தி அலங்கரிக்கின்றனர். தீர்த்தக்கரையில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள வலம்புரி விநாயகரையும், தீர்த்தக்கரை அரச மரத்தடியில் காணப்படும் அங்காரகனையும் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.