அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோவில் (பாரிமுனை)
God Name : மல்லிகேஸ்வரர் எனப் போற்றப்படும் மல்லிகார்ஜுனர்
ரஞ்சன்குடி கோவில்
Call : +91-
முன் காலத்தில் மண் மூடிக் கிடந்த கோவில் இது. மண்மேட்டை சமன் செய்ய முற்பட்டபோது கோபுரக் கலசம் தெரிந்ததாம். தோண்டிப் பார்த்ததில் கோவில் புதையுண்டிருப்பது தெரிய வந்தது. புதைந்திருந்த லிங்கத் திருமேனிக்கு சாற்றியிருந்த மல்லிகைப்பூ வாடாத நிலையில் இருந்ததால், சுவாமிக்கு மல்லிகேஸ்வரர் என்று பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்தனராம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மல்லிகேஸ்வரர் எனப் போற்றப்படும் மல்லிகார்ஜுனர். வட்ட வடிவமான ஆவுடையாரில் அழகிய பாணலிங்கம் உள்ளது. சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் மரகதாம்பிகை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பச்சைக் கல்லில் உருவான அழகிய திருமேனி. தாமரை பீடத்தின் மீது நின்ற திருக்கோலம். பால விநாயகர், ஆனந்த விநாயகர், குளக்கரை விநாயகர், கொடிமர விநாயகர் என்று அனேக பிள்ளையார்கள் எழுந்தருளியுள்ளனர். மஹாதேவர், தட்சிணாமூர்த்தி, கைலாசநாதர், காசி விஸ்வநாதர், ஆதிபுரீஸ்வரர், பைரவர், நடராஜர், சனீஸ்வரர், சந்திரன், நவகிரகங்கள் ஆகிய தரிசனங்கள் கிடைக்கின்றன. சரஸ்வதி தேவிக்கு தனி சந்நிதி உள்ளது. நடராஜர் சபை அழகாக உள்ளது. வெளியே உள்ள தூண் ஒன்றில் யமதர்மராஜன் திருவுருவம் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.