அருள்மிகு நாகாத்தம்மன் திருக்கோயில் (கொருக்குப்பேட்டை)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூங்கில் புதர் ஒன்று வெட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அதிலிருந்த குட்டிப் பாம்பை காப்பாற்றுகிறாள் ஒரு சிறுமி. அவள் குலம் தழைக்க பெரிய பாம்பு ஆசீர்வதிக்கிறது. பின்னர், புற்று ஒன்று வளர்ந்து, தான் அதில் குடியிருப்பதை அசரீரியாக அன்னை தெரியப்படுத்தினாள். ஊர் மக்கள் ஒன்று கூடி அன்னைக்கு ஆலயம் எழுப்பினார்கள். முன்பு விநாயகர் கோவிலாக இருந்த இடத்தில், அன்னையை பிரதிஷ்டை செய்து நாகாத்தம்மன் கோவிலாக மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அன்னை நாகாத்தம்மன், பக்தர்களுக்கு கருணையை வாரி வழங்கும் வரப்பிரசாதி. அவளை அணுகுபவர்கள், அவளது திருமுகத்தில் தாய் பாசத்தைக் காண்கிறார்கள். கத்தி, சூலம், உடுக்கை, கபாலம் ஏந்திய சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. சிரம் மட்டுமே கொண்ட மாரியம்மனையும் தரிசிக்கலாம். உற்சவ அன்னை மகிஷாசூரமர்த்தினி கோலம் கொண்டு வலம் வருகின்றாள். சிதம்பர கணபதி, வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமண்யர் இரண்டு பக்கங்களிலும் உள்ளனர். அநேக தெய்வங்களை வலச்சுற்றில் தரிசிக்கலாம். பெரிய புற்று ஒன்றும் காணப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.