மூலவர்: திருலோக்கியநாதர், அம்பாள்: ஸ்ரீ தர்ம தேவி.
வேகவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான கோவில் இது. சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர், இங்கு திருலோக்கியநாதர் என்ற பெயரில் யோக திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தெற்கில் ஸ்ரீ தர்ம தேவி சன்னிதியும், வடக்கில் ஸ்ரீ புஷ்பநந்த சேனாச்சாரி ஸ்வாமிகள் சன்னிதியும் அமைந்துள்ளன.
வெளிப் பிரகாரத்தில் தனி சன்னிதியில் பிரம்ம தேவர் கம்பீரமாக அமர்ந்து அருள்புரிகிறார்.
கோவிலின் நேர் பின் பகுதியில், 2000 வருடங்களாக இருக்கும் ஸ்தல விருட்சமான தர்ம குரா மரம் உள்ளது. கொடி மரத்தினருகே உள்ள வட்டக் கிணறு இத்தலத்தின் தீர்த்தமாக அமைந்துள்ளது.
23வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் சன்னிதி கிணற்றருகே உள்ளது.
தர்ம உபதேசங்களை போதித்த நான்கு ஆச்சாரியர்களின் பூத உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமான அருணகிரி மேடு, கோவிலுக்கு தென்மேற்கில் அமைந்துள்ளது.
இது ஒரு சமண - ஜைனர் கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.