அருள்மிகு திருமேற்றளிநாதர் திருக்கோவில் (காஞ்சிபுரம்)

God Name : திருமேற்றளிநாதர்

Call : +91-

சிவசாரூபம் (அதாவது சிவனைப் போன்ற வடிவம்) பெறவேண்டி திருமால் இத்தலம் வந்து சிவபெருமானைக் குறித்து தவம் இருந்தார். பிரத்யட்சமான சிவபெருமான், இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் வந்து பதிகம் பாடும்போது சிவசாரூபம் அடையலாம் எனக் கூறினார். சிவனடியார்களின் பெருமையும், சிவ நாமமும் சிவசாரூபத்தைப் பெற்றுத் தரும் என்பதை அனைவர்க்கும் புரிய வைக்கவே திருமால் தொடர்ந்து தவம் மேற்கொண்டார். ஞானசம்பந்தர் இங்கு வந்து பதிகம் பாடியதும் திருமால் சிவசாரூபம் பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு உருகிய திருமால், தனது வடிவத்திலிருந்து விடுபட்டு சிவலிங்க வடிவம் பெற்று ஓதஉருகீசர் எனத் திருநாமம் கொண்டு தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். தெருமுனையில் இப்பாடலை உற்றுக் கேட்ட முத்தீஸ்வரர் கோவிலொன்றும் உள்ளது. கிழக்கு கோடியில் நின்று கொண்டு ஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் சரிவர காதில் விழாததால், சிவபெருமான் இங்கு எழுந்தருளி உற்றுக் கேட்டாராம். இதனால் உற்றுக் கேட்ட முத்தீஸ்வரர் என்ற பெயர் வந்தது. 1400 ஆண்டுகளாக இருக்கும் மிகப் பழமையான கோயில். 'தளி' என்றால் கோவில். மேற்கு நோக்கி இருக்கும் தளியில் கோவில் கொண்ட ஈஸ்வரன் என்பதால் மேற்றளீஸ்வரர். 'திரு' சேர்த்து திருமேற்றளீஸ்வரர் என்பர். இதன் பொருள் புரியாமல் நாளடைவில் மருவி தெருமேட்டீசர் என்றாக்கி விட்டனர். தேவாரத் திருத்தலம்.
மூலவர்: திருமேற்றளிநாதர், அம்பாள்: திருமேற்றளி நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார் திருமேற்றளிநாதர். வட்ட வடிவ ஆவுடையாருடன் கூடிய சுயம்பு மூர்த்தம். உற்சவ மூர்த்தியான சந்திரசேகரரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. திருமேற்றளி நாயகி எனப்படும் அன்னை பராசக்தி நின்ற திருக்கோலத்தில் கிழக்கு பார்த்து எழுந்தருளி தனி சந்நிதி கொண்டுள்ளார். உயரமான, அழகான திருவுருவம். ஸ்தல விநாயகராக சித்தி விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். அர்த்த மண்டபம் அருகே மற்றோர் சன்னிதியில் ஓதவுருகீசர் எழுந்தருளியுள்ளார். வட்ட வடிவ ஆவுடையாருடன் கூடிய பெரிய சிவலிங்க வடிவம். முன்புறமாக திருமாலின் திருவடிகளை தரிசிக்கலாம். திருமால் சிவசாரூபம் வேண்டிப் பெற்ற சிவலிங்க வடிவம். ஓதும் தேவாரப் பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பதால் ஓதவுருகீசர் எனும் திருநாமம். இப்பகுதியில் 108 உருத்திரர்கள் பூஜித்ததாக சொல்லப்படுகிறது. திருஞானசம்பந்தர் திருக்கோவில் (காஞ்சிபுரம்) (திருமேற்றளி தெருவின் தொடக்கத்தில்) மூலவராக திருஞானசம்பந்தர் நின்ற திருக்கோலத்தில் கைகளைக் குவித்து வணங்கும் நிலையில், திருமேற்றளிநாதரை நோக்கிய வண்ணம் தரிசனம் தருகிறார். வலக்கை சுட்டிய விரலுடனும், இடக்கையில் பொற்கிண்ணம் ஏந்தியும் உற்சவ மூர்த்தி காட்சி தருகிறார். சிவசாரூபம் பெற விரும்பிய திருமாலுக்காக இத்தலம் வந்து பதிகம் பாடியவர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.