அருள்மிகு ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் திருக்கோவில் (நெற்குன்றம்)
God Name : ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
நெல் விளைச்சல் மிகுந்து இருந்த ஊர் என்பதாலும், நெற்கள் குவிந்திருக்கும் குன்றின் மீது வரதராஜர் நிற்பதாலும், இவ்வூர் நெற்குன்றம் எனப் பெயர் பெற்றது. பக்தர்கள் தங்களது பிரச்சினைகளையும், பிரார்த்தனைகளையும் கடிதமாக எழுதி பெருமாள் பெயர் மற்றும் ஆலய விலாச முகவரிக்கு அனுப்புகின்றனர். கடிதங்களில் குறிப்பிடப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற கூட்டுப் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த கூட்டுப் பிரார்த்தனை சனிக்கிழமைதோறும் 11 மணிக்கு நடைபெறுகிறது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கிழக்குப் பார்த்து, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஐந்தரை அடி உயரம் கொண்ட அழகிய சிலா விக்ரஹம். மேற்கரங்கள் சங்கு - சக்கரம் கொண்டிருக்க, இடது கீழ்க்கரம் கதையை ஊன்றியும், வலது கீழ்க்கரம் அபயம் அளிப்பதாகவும், நாக கங்கணம் தரித்தும், அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. பெருமாளின் நேத்ர தரிசனம் இங்கு விசேஷமானது. மின்ஒளி இல்லாமல், வெறும் விளக்கொளியில், திருமுகத்தருகே ஆரத்தி காண்பிக்கும்போது, பெருமாளின் கண்கள், நம்மையே பார்ப்பது போன்று இருப்பது, சேவிப்போரை மெய் சிலிர்க்க வைக்கின்றது. நேத்ர தரிசனத்திற்காகவே, தினமும் காலை வேளைகளில், சேவார்த்திகள் கூட்டம் கூடும். மூலவருடன் ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி தாயார்கள் எழுந்தருளியுள்ளனர். தாயாருக்கு இங்கே தனியாக சந்நிதி இல்லை. இடக்கரத்தில் கதையுடன் காட்சி தரும் உற்சவ மூர்த்தியும் (கரிவரதராஜப்பெருமாள்), கையில் வெண்ணையுடன் இருக்கும் சந்தான கிருஷ்ணரும் மிகவும் அழகான விக்ரஹங்கள். இத்தலத்திலுள்ள வரத ஆஞ்சநேயர் மிகுந்த வரப்ரசாதி. தும்பிக்கை ஆழ்வார், நம்மாழ்வார், விஷ்ணு துர்க்கை ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.