வாணாசுரன் என்னும் அசுரராஜனின் படைத்தளபதிகளான ஓணன், காந்தன் இருவரும் சிவபக்தர்கள். பக்தி ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள். இவ்விருவரும் காஞ்சி வந்து தீர்த்தம் அமைத்து அதன் கரையில் தனித்தனி சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டு வந்தனர். இதனால் மகிழ்ந்து பிரத்யட்சமானார் சிவபெருமான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஓணன் மற்றும் காந்தன் வழிபட்டதால் இவ்வூர் ஓணகாந்தன்தளி எனப் பெயர் கொண்டது.
இவ்விறைவனை வழிபடுபவர்களுக்கு மெய்ஞானம், முக்தி அருள வேண்டியும், இங்கேயே தங்கியருள வேண்டும் என்றும், தங்களுக்கு பிரத்யட்சமான இறைவனிடம் கோரினர்.
சுந்தரர் கேலி செய்து பதிகம் பாடியதால், அங்கும் தொடர்ந்து சென்று "நெய்யும் பாலும்" எனும் திருப்பதிகம் பாடியதால், அம்மரத்து காய்களையே பொன் காய்களாக விழுமாறு அவற்றை சுந்தரர் பெற்றார் என்றும் செவி வழிக்கதை வழக்கத்தில் உள்ளது.
இது ஒரு தேவாரத்திருத்தலம்.
மூலவர்கள்: ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர்.
இரண்டு சிவனார்கள் சிவலிங்க வடிவினர்களாக எழுந்தருளி அருள் புரியும் சந்நிதிகள். வட்ட வடிவ ஆவுடையாரும் அழகிய பாணமும் கொண்டு காணப்படும் அழகிய லிங்கமாக ஓணேஸ்வரரும், காந்தேஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர்.
வடக்குபுறமாக உள்ள தனி சந்நிதியில் ஜலந்தரேஸ்வரர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார்.
கருவறை மண்டப முகப்பில் ஒலி தரும் விநாயகர் அருகில் சென்று செவியை வைத்துக் கேட்டால் ஓங்கார ஒலி வந்து கொண்டிருக்கும்.
சுந்தரர் பதிகத்தில் குறிப்பிட்ட வயிறுதாரிப் பிள்ளையார் சன்னிதி கொண்டுள்ளார். மயில் மீதேறிய முருகன் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர்.
தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் வித்தியாசமாக உள்ளது. வலது காலைத் தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். சனகாதி முனிவர்கள் உடன் உள்ளனர்.
ஓணன், காந்தன், ஜலந்திரன் ஆகிய மூன்று அசுரர்கள் அமைத்து வழிபட்ட சிவலிங்கங்கள் தனித்தனி சன்னிதிகள் கொண்டுள்ளன. அர்த்த மண்டபத்தில் சுந்தரரின் திருவுருவத்தையும் இறைவனின் பாத தரிசனத்தையும் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.