அருள்மிகு வல்லீஸ்வரர் திருக்கோயில் (பாடி)
God Name : வல்லீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
பரத்வாஜ முனிவர் வலியன் எனும் கருங்குருவி வடிவில் இத்தலத்து இறைவனை வழிபட்டதால், இவ்வூருக்கு 'வலிதாயம்' எனப் பெயர் வந்தது.
ஆதியில், போர் படைக்கருவிகளை பத்திரப்படுத்தி வைக்கும் இடமாக இருந்ததால், 'படைவீடு' என்றழைக்கப்பட்டு, பின்னர் இந்நாளில் 'பாடி' என அழைக்கப்படுவதாக கூறுவர். நான்கு பேர்கள் பாடியதால் 'பாடி' எனப் பெயர் கொண்டதாகவும் கூறுவர்.
பிரம்ம புத்ரிகளான கமலை - வல்லி ஆகிய இருவரும் சிவபூஜை செய்ததன் பலனாக, விநாயகப் பெருமான் அவர்களை இத்தலத்தில் மணப்பதாக ஐதீகம்.
வியாழ பகவான், தனது அண்ணன் உதத்தியர் மற்றும் அவர்தம் மனைவியான மமதை ஆகியோருடன் இருக்கையில், கருவுற்றிருந்த மமதையிடம் தகாது நடந்து கொண்டார். கருவை காப்பாற்ற சிவபெருமானை வேண்டினாள் மமதை.
தீர்க்கதன் எனும் குழந்தை பார்வையற்றவனாகப் பிறந்தது.
செய்த பிழைக்கு பிராயச்சித்தம் வேண்டிய வியாழன், மார்க்கண்டேய ரிஷியின் யோசனைப்படி, இத்தலம் வந்து, தவமிருந்து, இவ்விறைவனை வழிபட்டு, தனது பாவம் நீங்கப் பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இழந்த பெருமைகளை வியாழன் இத்தலத்தில் மீண்டும் பெற்றதால் இது ஒரு குரு ஸ்தலமாக விளங்குகிறது.
மூலவர்: வல்லீஸ்வரர், அம்பாள்: ஜெகதாம்பாள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் வல்லீஸ்வரர். சுயம்பு மூர்த்தம்.
சதுர பீட ஆவுடையார். கிழக்கு பார்த்த சந்நிதி. இவருக்கு வலிதாயநாதர் என்ற பெயரும் உண்டு. கல்வெட்டுக்கள் இவரை 'உடையார் திருவலிதமுடைய நாயனார்' எனக் குறிப்பிடுகின்றன.
அம்பாள் ஜெகதாம்பாள் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். தெற்கு பார்த்த சந்நிதி. இவருக்கு 'தாயம்மை' என்ற பெயரும் உண்டு.
ஸ்தல விநாயகராக வரசித்தி விநாயகர் ஆசி வழங்குகின்றார். சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. பிரகார வலச்சுற்றில் அநேக மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
சிறப்பு மூர்த்தங்களாக - கமலை மற்றும் வல்லியுடன் விநாயகப் பெருமான், சங்கு - சக்கர தாரிணியாக விஷ்ணு துர்க்கை, வெட்டிவேர் பந்தலின் கீழ் சோமாஸ்கந்த மூர்த்தி ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. இவரை 'வியாக்யான தட்சிணாமூர்த்தி' எனப் போற்றி வழிபடுவார்கள்.
கஜப்பிருஷ்ட விமானமும், தூங்கானை மாட அமைப்பும் கொண்ட கோயில். வேப்ப மரத்தை அணைத்துக் கொண்டுள்ள அரசமரம், கோசாலை, இளநீரின் சுவை கொண்ட கிணற்று தீர்த்தம் ஆகிய பெருமைகளை உடைய கோயில்.
பாதிரி மரம், மகிழ மரம் ஆகியவை ஈஸ்வரனுக்கும், கொன்றை மரம் அம்பாளுக்கும் ஸ்தல விருட்சங்களாக உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.