அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் (சிறுவாபுரி)
God Name : மூலவர்: பாலசுப்ரமண்யர், உற்சவர்: ஆறுமுகப் பெருமான்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்ரீ ராமரின் அஸ்வமேத யாகக் குதிரை கட்டப்பட்ட இடம். லக்ஷ்மணனை லவ-குசர்கள் தோற்கடித்த இடம்.
ஸ்ரீ ராமபிரானின் புத்திரர்களான லவ-குச சிறுவர்கள், தங்களது தந்தை எனத் தெரியாமல் அவருடன் போரிட்டதால், 'சிறுவர் அம்பு எடும்' என்பது 'சிறுவரெம்பெடு' எனப் பெயர் கொண்ட ஊர். தற்போது 'சின்னம்பேடு' எனப்படுகிறது.
'பேடு' என்றால் அம்பு வைக்கும் கூடை என்று அர்த்தம். இதனால் 'சின்னம்பேடு' என்றானது.
அருணகிரிநாதருக்கு முருகன் காட்சி தந்த ஸ்தலம். அருணகிரிநாதர் அர்ச்சனை திருப்புகழ் பாடிய ஸ்தலம்.
முருகனை மகிழம்பூவினால் அர்ச்சித்து, மகிழம்பூ மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். பச்சை கற்பூர அபிஷேகம், தேன் கலந்த தினை மாவு விளக்கு, கடலைப்பருப்பு பாயாச நைவேத்யம், நெய் அல்லது இலுப்பை எண்ணெய் விளக்கு, சிகப்பு அல்லது பச்சை வஸ்திரம் அணிவித்தல் ஆகிய வழிபாடுகள் முருகனுக்கு உகந்தவை என அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
பூரம், உத்திரம், விசாகம் நட்சத்திர தினங்களிலும், பௌர்ணமி, சுக்ல த்விதியை, சுக்ல சஷ்டி நாட்களிலும், செவ்வாய், வியாழன், வெள்ளி தினங்களிலும் முருகனுக்கு விசேஷம் என அர்ச்சகர் மேலும் தெரிவிக்கின்றார்.
மூலவர்: பாலசுப்ரமண்யர், உற்சவர்: ஆறுமுகப் பெருமான்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள பாலசுப்ரமண்யரின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. சதுர்புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனி. மேற்கரங்களில் ஜபமாலை, கமண்டலம் கொண்டும், கீழ் வலக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடக்கரம் இடுப்பில் வைத்தும், கம்பீரமாக தரிசனம் தருகின்றார்.
உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் ஆறுமுகனை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு. பஞ்சலோக படிமம். வள்ளியின் கரம் பற்றிய நிலையில், மணக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். வள்ளி மணவாளப் பெருமானின் திருமேனி உயிரோட்டத்துடன் இருக்கின்றது. மலர் அலங்காரங்கள் சிரத்தையாக செய்கின்றனர்.
மயில் மண்டபத்திலுள்ள மரகத மயில் கலைநயம் கொண்டுள்ளது. திருமணத்தடை நீங்க வள்ளி - மணவாளனை பிரார்த்திக்கின்றனர்.
மரகதலிங்க வடிவில் அருணாச்சலேஸ்வரர், உண்ணாமுலையம்மை, ஆதி முருகன், மரகத விநாயகர், சூரிய - நாராயணர், முனீஸ்வரர், பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.