அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (கும்பமுனி மங்கலம்)

God Name : அகஸ்தீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக சிவலிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் அகஸ்தீஸ்வரர் தேஜோமய லிங்கம். கும்பமுனி என போற்றப்பட்ட அகஸ்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம். ஆரணி ஆற்றின் கரையில், ஹரிஹரன் கடை வீதியில் பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமமும், அகஸ்தியர் கோவிலும், ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கின்றன. ஸ்ரீ ஆஞ்சநேயர் மிகுந்த வரப்பிரசாதி. இவருக்கு நித்ய பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் யாவும் சிரத்தையாக செய்கின்றனர். புத்திரபாக்கிய வேண்டுதல்களுக்கு பலன் இருப்பதாக கூறுகின்றனர். ஹரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் விதத்தில் கரிகிருஷ்ண பெருமாளையும், அகஸ்தீஸ்வரரையும், இந்த ஆஞ்சநேயர் சந்நிதி முன்பாக, சந்திக்க வைக்கும் நிகழ்ச்சியை விழாவாக கொண்டாடுகின்றனர். சித்ரா பௌர்ணமியின் 5ம் நாள், ஹரியும்-சிவனும் சந்தித்து மாலை மாற்றும் நிகழ்ச்சி விழா கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயர் பள்ளியறை சேவை 10ம் நாள் கொண்டாடப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.