அருள்மிகு கச்சி நிலாத்துண்டப் பெருமாள் திருக்கோவில் (காஞ்சி)
God Name : நிலாத்திங்கள்துண்டர் எனப்படும் சந்திரசூடப் பெருமாள்
Call : +91-
பாற்கடலைக் கடையும்போது வாசுகி வெளிப்படுத்திய விஷமூச்சின் வெப்பம் தாளாமல் கருநிறம் அடைந்த திருமால், காஞ்சி மாநகர் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். விஷ்ணுவிற்குப் பிரத்யட்சமான சிவபெருமான் தன் தலையிலிருந்த பிறைச் சந்திரனின் ஒளியை, விஷ்ணு மீது பரவச் செய்தார். பிறைச் சந்திரனுடைய குளிர்ச்சி பொருந்திய கிரணங்களால் வெப்பம் நீங்கப் பெற்று குளிர்ச்சி அடைந்த திருமால் மீண்டும் தன் நீல வண்ணத்தைப் பெற்றார் என ஸ்தல வரலாறு. இதனால் பெருமாளுக்குக் கச்சி நிலாத்துண்டர் எனும் திருநாமம் வந்தது. பெருமாள் நிறம் மாற தான் காரணமாகி விட்டோமே என வருந்திய வாசுகி, குடையாக அலங்கரித்துப் பரிகாரம் தேடிக் கொண்டது. பார்வதியின் தவத்தைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் அவர் தவம் மேற்கொண்டிருந்த மாமரத்தை எரித்தார். தங்கைக்காக எரிந்த மாமரத்தைத் தழைக்கச் செய்தார் பெருமாள். தாபத்தைத் துண்டித்ததால் நிலாத் துண்டப் பெருமாள் என்ற திருநாமத்தைக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலஸ்தானத்தில் மூலவராக நிலாத்திங்கள்துண்டப் பெருமாள் எனப்படும் சந்திரசூடப் பெருமாள் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தாயாருக்கு சன்னதி இல்லை. பொதுவாக பெருமாளின் மார்பில் வாசம் செய்யும் லக்ஷ்மி, வித்தியாசமாக இங்கு நாபித்தாமரையில் இருக்கிறார். இவரே நேர் ஒருவரில்லாவல்லி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.