அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் (அரியதுறை)
God Name : மூலவர்: ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர்் உற்சவர்: ஸ்ரீ கல்யாண சுந்தரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
சிவ கடாட்சம் பெற ஏதுவான ஸ்தலம் எதுவென பிரம்மனிடம் உரோமச மகரிஷி கேட்கிறார். பிரம்மா ஒரு தர்ப்பையை பந்தாக சுருட்டி வீசினார். அது இங்குள்ள பிரம்மாரண்ய நதிக்கரையில் வந்து விழுந்தது. அந்த இடத்தை தேர்ந்தெடுத்து, ரோமச மகரிஷி தவம் செய்யலானார். இவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் மகரிஷிக்கு பிரத்யட்சமானார். தனக்கென்று வரம் ஏதும் கேளாமல், இத்தலத்தில் அருள்பாலிக்க வேண்டுமென ரோமச மகரிஷி கோரினார்.
காகபுஜண்டர் - வகுளா தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்து, பதினெண் சித்தர்களில் ஒருவராகவும், மகரிஷியாகவும் வாழ்ந்த ரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் வரமூர்த்தீஸ்வரர்.
பிரம்மா அரணிக்கட்டையை கடைந்தபோது தோன்றிய அரணி நதிக்கரையில், கிருஷ்ணர் அஸ்வத்த மரமாக நிற்கிறார்.
அத்ரி முனிவரின் புத்திரனான முகுந்த முனிவரும் இத்தலத்தில் தவம் புரிந்தார். அரணி நதிக்கரையில் கால பைரவர் வடிவில் பிரத்யட்சமாகி தரிசனம் தந்த இவரை வழிபடுவோரை காலனின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டுமென முகுந்த முனிவர் வேண்டினார்.
விருத்தாசுரனைக் கொன்றதால் இந்திரன் பிரம்மஹத்தி தோஷம் கொண்டான். இவ்விறவனை வழிபட்டு தான் கொண்ட தோஷங்களை போக்கிக் கொண்டான்.
ஆயுளுடன் வாழ வழி காட்டும் அரன் உறையும் ஸ்தலம் என்பதால், அரியதுறை எனப் பெயர் கொண்டதாக ஒரு குறிப்பு தெரிவிக்கின்றது.
இது பஞ்ச பிரம்ம ஸ்தலங்களுள் ஒன்றாகும்.
மூலவர்: ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர்் அம்பாள்: ஸ்ரீ மரகதவல்லி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். சதுர பீட ஆவுடையுடனும், அழகிய பாணத்துடனும் கூடிய ஆகர்ஷண லிங்கம் இது. சத்யோஜாத முகம் கொண்டு கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றார். இது தேவர்கள் காலத்திய புராதன லிங்கம். உற்சவராக கல்யாண சுந்தரர் அருள்பாலிக்கிறார்.
தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் மரகதவல்லி எழுந்தருளியுள்ளார். தனது இடது பாதத்தை சற்று முன்னே வைத்து நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
அம்மையப்பனை ஒருசேர தரிசிக்கும் விதத்தில் சந்நிதிகள் அமைந்துள்ளன. இப்படி ஒருசேர தரிசனம் செய்பவர்களுக்கு தம்பதி ஒற்றுமை கிட்டும் என்று கூறுவர்.
ஓங்கார பிரகாரம் மற்றும் ஓங்கார பிரதட்சணம் இங்கு சிறப்பு.
32 சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பிள்ளையார், முருகன் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. சுயம்பு பைரவர், பிரதிஷ்டை செய்யப்பட்ட பைரவர் என இரண்டு பைரவர்களை தரிசிக்கலாம்.
விதானத்தில் சர்ப்பங்களின் வடிவங்களும், பல்லியும் வரையப்பட்டுள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.