அருள்மிகு சிவாநந்தேஸ்வரர் திருக்கோவில், திருக்கண்டலம்
God Name : ஸ்ரீ சிவாநந்தேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
நிலப்பரப்பை சரிசமன் செய்ய தென் பகுதிக்கு வந்த அகஸ்திய முனிவர், பார்வதி - பரமேஸ்வர திருக்கல்யாணக் காட்சியைப் பார்க்க முடியாமல் போனதே என்று வருந்தியதால், இத்தலத்திற்கு முனிவரை வரவழைத்து, பார்வதி - பரமேஸ்வரராக தரிசனம் தந்து, அகஸ்தியருக்கு ஆனந்தம் தந்ததால், இவ்விறைவனுக்கு சிவாநந்தீஸ்வரர் என்ற பெயரும், அம்பிகைக்கு ஆனந்தவல்லி என்ற பெயரும் ஏற்பட்டன.
சிவபெருமானை மட்டும் வழிபடும் ப்ருகு முனிவர், சிவ - சக்தி வடிவம் கண்டால், வண்டு ரூபம் எடுத்து, துளைத்து, நடுவே புகுந்து, சிவனை மட்டும் வலம் வருபவர்.
இத்தலத்திற்கு வந்த பிருகு முனிவர் நீண்ட தவம் இயற்றி ஆயிரம் கள்ளில் மலர்களால் சிவாநந்தேஸ்வரரை அர்ச்சித்து வழிபட்டார். இதனால் மகிழ்ந்து நேரில் பிரத்யட்சமான அம்பிகையோடு தட்சிணாமூர்த்தி கோலத்தில் வந்து, ப்ருகு முனிவருக்கு உபதேசம் செய்தார் என ஸ்தல வரலாறு தெரிவிக்கின்றது.
குசன் தனது தலையை மூழ்கச் செய்து குளித்த ஆறு என்பதால் குசஸ்தலை ஆறு எனப் பெயர் கொண்டதாகக் கூறுவர்.
ஞானசம்பந்தர் குசஸ்தலை ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது, அவரது விபூதிப் பையை திருக்கள்ளில் ஊரின் ஆற்றின் கரையில் வைத்தார்.
படிக்கட்டுக்களைக் கொண்ட, ததும்ப ததும்ப தண்ணீர் நிறைந்த அழகிய குளம் ஆலயத்தின் முன்பாக உள்ளது. தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறும்.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஸ்ரீ சிவாநந்தேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ ஆனந்தவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிபவர் மூலவரான ஸ்ரீ சிவாநந்தேஸ்வரர். இவர் சுயம்பு மூர்த்தி.
சதுர ஆவுடையாருடன் கூடிய ஒளி வீசும் சிறிய லிங்கத் திருமேனி. இவருக்கு கள்ளீஸ்வரர், கள்ளில்நாதர் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. தூங்கானை மாட அமைப்பைக் கொண்ட விமானம்.
அழகே உருவாக எழுந்தருளியிருக்கின்றாள் அம்பிகை ஆனந்தவல்லி. இந்த இரண்டு சந்நிதிகளுக்கிடையே ஸ்ரீ பாலசுபிரமண்யர் சந்நிதி அமைந்துள்ளது.
மூன்று சந்நிதிகளும் ஒரே வரிசையில் கிழக்கு நோக்கி இருப்பது சோமாஸ்கந்த வடிவ அமைப்பை நினைவுறுத்துகிறது.
பிரதோஷ நாயகர் சந்திரசேகர் அம்பிகையுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரதோஷ நந்தி, சுந்தர விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ காளத்தீஸ்வரர் மற்றும் அநேக மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
விசேஷ மூர்த்தியாக ஸ்ரீ சக்தி தட்சிணாமூர்த்தி, சக்தி தேவியை மடி மீது அமர்த்தியபடி காட்சி தருகிறார். மேற்கரங்களில் ஜெபமாலை, அமுத கலசம் கொண்டும், முன் கரங்களில் சின்முத்திரை, புத்தகம் ஆகியன கொண்டும் தரிசனம் தருகின்றார். அருகே ப்ருகு முனிவர் நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.
முன்மண்டபத்து முகப்பில் ரிஷபாரூடரின் அற்புதக் கோலத்தை அழகாக வடித்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.