அருள்மிகு சர்வேஸ்வரர் திருக்கோவில், தாமரைப்பாக்கம்
God Name : சர்வேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
பிதாமஹான் சதன் எனும் சேவை நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி, அதில் ஆதரவற்ற வயதானவர்களைச் சேர்த்துப் பராமரிக்கின்றனர். இங்கு கீதா சத்சங் ஹால் உள்ளது. மருத்துவமனை, பள்ளிக்கூடம் ஆகியனவும் நடத்துகின்றனர். நிறைய தாமரைப் பூக்கள் பூத்த குளங்கள் இவ்வூரில் மிகுந்து காணப்பட்டதால், இவ்வூர் தாமரைப்பாக்கம் எனப் பெயர் பெற்றது.
சிவலிங்கமே கோபுரமாக அமைந்திருப்பது எங்கும் காண முடியாத புதுமையாகும். இது மிகப்பெரிய பிரம்மாண்டமான அமைப்பைக் கொண்டுள்ளது. தரைமட்டத்திலிருந்து 90 அடி உயரம் உள்ளது. லிங்கம் மட்டும் 65 அடி உயரம் கொண்டது. சுற்றிலும் வட்ட வடிவமான பிரார்த்தனை கூடம் அமைந்துள்ளது. மூலவராக தரிசனம் தருபவர் ஸ்படிக லிங்கம். இதில் விசேஷமான வைரம் பதிக்கப்பட்டுள்ளது. விலை மதிப்பற்ற இந்த லிங்கத்தைப் பாதுகாப்பு கருதி கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துள்ளனர். இதற்குப் பின்னால் ஒரு கிரானைட் லிங்கம் உள்ளது. அபிஷேகம் செய்வதானால் இந்த லிங்கத்திற்கே செய்கின்றனர். மகா சிவராத்திரியன்று மட்டும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பிரார்த்தனை கூடத்தில் அமர்ந்து பஞ்சாட்சர மந்திரத்தை உரக்கக் கூவினால், அது எதிரொலித்து நமது காதிற்கே திரும்ப வருவது கேட்கச் சந்தோஷமாக இருக்கிறது. இங்கு அமர்ந்து பக்தர்கள் மந்திரங்களை உச்சரிக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.