அருள்மிகு திருத்தாளீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல்
God Name : திருத்தாளீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
ஸ்தல வரலாறு: கரிகாலச் சோழனுக்கும், இந்த பகுதியை ஆண்ட குறுநில மன்னனுக்கும் நடந்த போரில், குறுநில மன்னன் தோல்வியை அடையும் நிலையில் காணப்பட்டான். காளி உபாசகனாக இருந்ததால், காளியை துணை கொண்டு போரிட்டான். சிவபெருமானின் அருளால் கரிகாலச் சோழன் ஜெயித்து, காளியையும் சிறை பிடித்தான். காளி எல்லை காவல் தெய்வங்களுள் ஒருவளாக நிறுத்தப்பட்டாள். சோழனை பழி வாங்கவும், காளியை மீட்கவும் முற்பட்ட சமண மன்னன் ஒருவன், அபிசார ஹோமம் நடத்தி, சீறும் பாம்பை அனுப்பினான். பாம்பின் வாலைப் பிடித்து சுழற்றி வீசியடித்து, சோழனைக் காப்பாற்றினார் சிவபெருமான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அந்த பாம்பின் தலை விழுந்த இடம் தலைக்காஞ்சேரி, தோல் விழுந்த இடம் ஆற்றம்பாக்கம், உடலின் பெரும்பான்மையான பகுதி விழுந்த இடம் பெரும்பாக்கம். சிவபெருமான் அரவத்தைக் கொன்ற இடம் அரன்வாயல் என்று கூறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் திருத்தாளீஸ்வரர். தாளிப்பனை மரத்தடியிலிருந்து எழுந்தருளியதால் திருத்தாளீஸ்வரர் எனும் திருநாமம் பெற்றார். இக்கோவில் கிழக்கு பார்த்த சந்நிதியைக் கொண்டுள்ளது. தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீ மரகதாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். பிள்ளையார், முருகன், சூரியன், கைலாசநாதர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பைரவர், விசாலாட்சி சகித விஸ்வநாதர், பதஞ்சலி முனிவர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். கஜப்பிருஷ்ட விமானத்தைக் கொண்ட மிகப் பழமையான கோவில் இது. தற்போது பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.