அருள்மிகு சிங்காண்டீஸ்வரர் திருக்கோவில் (திருவூர்)
God Name : சிங்காண்டீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிங்காண்டீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார். எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பாணமும், சதுர ஆவுடையாரும் கொண்ட அழகிய லிங்கம் இது. ரிஷ்ய சிருங்கர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம். ஆதிகாலத்தில் ரிஷ்ய சிருங்கேஸ்வரர் என்று அழைக்கப்பட்டு, தற்போது சிங்காண்டீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாக ஒரு குறிப்பு கூறுகிறது. கருவறை வாசலில் பால விநாயகரையும், பாலமுருகனையும் தரிசிக்கலாம். தனி சந்நிதியில் தெற்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள் அம்பாள் உத்பலாம்பாள். மகா மண்டபத்து தூண்களில் உள்ள புடைப்பு சிற்பங்கள் அனைத்தும் சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. பிரகார வலச்சுற்றில் - அத்திமுக விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், ஆறுமுகக் கடவுளை கண்ணாடியில் ராமலிங்க அடிகளார் தரிசிக்கும் காட்சி, அறுபடை வீடுகளின் மூலவர்கள் ஆகியனவற்றை தரிசிக்கலாம். ஸ்தல விருட்சமான வில்வ மரத்தின் கீழ் நாகேஸ்வரரை தரிசிக்கலாம். சப்த கன்னியர்கள், கால பைரவர், சூரிய-சந்திரர்கள் ஆகிய திருவுருவங்களைக் காணலாம். நித்ய பூஜைகள், பிரதோஷ வழிபாடு ஆகியன சிறப்புற நடக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.