அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் திருக்கோவில் (புட்லூர்-ராமபுரம்)
God Name : தாண்டவராயன் (சிவன்)
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மேல்மலையனூரிலிருந்து, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை அழைத்துக்கொண்டு இவ்வூர் வழியே நடந்து வந்தார் ஒருவர். கையில் சூலம் ஒன்றை வைத்து ஊன்றி நடந்துகொண்டிருந்த அந்தப் பெண்மணி, மேற்கொண்டு நடக்க முடியாமல் கஷ்டப்பட்டாள். தண்ணீர் இல்லாமல் தாகம் மேலிட, சோர்வு ஏற்பட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்துவிட்டாள்.
அருகேயுள்ள குசஸ்தலை ஆற்றின் பக்கம் தண்ணீர் எடுத்து வர ஓடினான் கணவன். திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கையில் தண்ணீருடன் மறு பக்கம் செல்ல முடியாமல் தவித்தான். வெள்ளம் வடிந்து, சகஜ நிலையானதும், மனைவியை இருக்கச் சொன்ன மரத்தடி நோக்கி ஓடினான். அங்கு, நிறைமாத கர்ப்பிணியானவள் ஒரு புற்று வடிவம் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனான். மேல்மலையனூரிலிருந்து, மனித உருவில் அங்காள பரமேஸ்வரியே இங்கு வந்திருப்பதாக இவ்வூர் மக்கள் கொண்டாடுகின்றனர்.
பூக்கள் மிகுந்த சோலையின் நடுவே புற்று வடிவம் கொண்டதால் பூங்காவனத்தம்மன் என்று பெயர் கொண்டாள் - என ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் புற்று வழிபாடுதான் பிரதானம். தலை, கை, கால், மார்பு ஆகியன வளர்ந்து, நிறைமாச கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போல், புற்றே காட்சி தருவது அதிசயமான உண்மை. பூங்காவனத்தம்மன் என்று பெயர். மஞ்சள், குங்குமம் துலங்க மங்களகரமாகக் காட்சி தருகிறாள்.
கருவறையின் பின்னால் அங்காள பரமேஸ்வரி அம்மன் தரிசனம் தருகின்றாள். வேப்பிலையும், எலுமிச்சம்பழமும் கோர்த்த மாலை அணிந்து, கையில் சூலம் ஏந்தி, கருணை பொழியும் கண்களுடன் காட்சி தருகின்றாள். அடுத்துள்ள சந்நிதியில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். தாண்டவராயன் என்று பெயர்.
துவாரபாலகியர்களுடன் கூடிய முகமண்டபம். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் பிள்ளையார், மதுரை வீரன் ஆகியோரின் திருவுருவங்களைத் தரிசிக்கலாம்.
பிரகார வலச்சுற்றில் ஸ்தல விருட்சமான வேம்பு - அதனடியில் விநாயகர், கருமாரி, நாக தேவதை ஆகியன பிரதிஷ்டை செய்துள்ளனர். குழந்தை பாக்கியம் வேண்டுவோர், இதில் தொட்டில் கட்டி, பிரார்த்தனை செய்கின்றனர். திருமணம் வேண்டுவோர் மஞ்சள் சரடை மரத்தில் கட்டி வேண்டிக்கொள்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.