நவக்கிரகக் கோட்டை, வரசித்தி விநாயகர், நவக்கிரகங்கள் திருக்கோவில்
God Name : ஸ்ரீ வரசித்தி விநாயகர், நவகிரகங்கள்
திருக்கழுக்குன்றம் கோவில்
விழுப்புரம்
Call : +91-
மூலஸ்தானத்திற்கு முன்புள்ள விசாலமான முன்மண்டபத்தில் விநாயகப் பெருமானின் பலவிதமான வண்ண சுதைச் சிற்பங்களைக் காணலாம். அவற்றுள் மிகப் பெரிய திருவுருவமாக சக்தி கணபதி தரிசனம் தருகின்றார்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். திருமுக அமைப்பு பாம்பைப் போல் உள்ளது. சுயம்பு மூர்த்தம். இரண்டு பக்கங்களிலும் ராகு மற்றும் கேது எழுந்தருளியுள்ளனர். மொத்தத்தில் பார்க்கும்போது ஒரு லிங்கத்தின் அமைப்பு போலுள்ளது. ஸ்ரீ வரசித்தி விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி.
மூலஸ்தானத்தின் வலச் சுற்றில் ஜொலிக்கும் பொன் தகட்டில் பலவித விநாயகர் வடிவங்கள் செதுக்கியுள்ளனர்.
மூலஸ்தானத்தின் பின்புறமுள்ள விசாலமான வெளிப்புறத்தில் நவக்கிரகக் கோட்டை அமைத்துள்ளனர்.
நடுநாயகமாக ஸ்ரீ சூரிய பகவான் தனது இரு மனைவிகளுடனும் (சாயா - உஷா) ஏழு குதிரைகளைப் பூட்டிய ரதத்துடனும், சிகப்பு வஸ்திரம் அணிந்தும், தரிசனம் தருகின்றார்.
சூரியனைச் சுற்றிலும் மற்ற கிரகங்கள். தெற்கில் அங்காரகன், வடக்கில் குரு, மேற்கில் சனி, கிழக்கில் சுக்கிரன், வடகிழக்கில் புதன், தென்கிழக்கில் சந்திரன், தென்மேற்கில் ராகு, தென்கிழக்கில் கேது என பிரதிஷ்டை செய்துள்ளனர்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் அதனதன் வர்ணங்கள், வாகனங்கள், தானியங்கள், உரிய விருட்சங்கள், அடையாளங்கள், மற்றும் அவரவர் மனைவியர், அதிதேவதைகள் என துல்லியமாக அமைத்துள்ளனர். அந்தந்த சந்நிதிகளின் மேலுள்ள கலசத்தில் அவரவர்க்குரிய தானியங்களை நிரப்பியுள்ளனர். அவரவர்க்குரிய அட்சரங்களும் வரையப்பட்டுள்ளன.
அடுத்துள்ள சந்நிதியில் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள ஈஸ்வரனையும், காசி விஸ்வநாதரையும், அம்பிகையையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.