அருள்மிகு யோக நரசிம்மஸ்வாமி மற்றும் யோக ஆஞ்சநேயர் கோவில் (சோளிங்கபுரம்)

God Name : யோக நரசிம்மஸ்வாமி (பெரிய மலை), உற்சவர் - பக்தவத்ஸலன் (ஊர்க் கோவில்), ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் (சின்ன மலை)

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

ஸ்தல வரலாறு (பெரிய மலை): மகாவிஷ்ணுவின் அவதாரங்களிலேயே பெருமை வாய்ந்ததான நரசிம்ம அவதாரம் பக்தன் பிரஹ்லாதனுக்காக தோன்றியது. அந்த அவதாரக் காட்சியைப் பார்க்க ஆசைப்பட்ட சப்த ரிஷிகள், இங்கு கடுந்தவம் புரிய முற்பட்டனர். அவர்கள் தவம் செய்ய ஆரம்பித்து ஒரு நாழிகைக்குள் நரசிம்மர் ப்ரத்யட்சமானார். 'கடிகா' எனும் சொல்லுக்கு 'ஒரு நாழிகை' எனப் பொருள் (வடமொழி). ஒரு நாழிகைப் பொழுதில் தரிசனம் கிடைத்ததாலும், ஒரு நாழிகையேனும் இத்தலத்தில் வழிபட்டால் முக்தி கிடைப்பதாலும், இத்தலத்திற்கு 'கடிகாசலம்' என்றும் 'திருக்கடிகை' என்றும் பெயர் வந்தது. 'கடிகா' என்றால் தமிழில் 'பூஞ்சோலை' என்றும் பொருளுண்டு. "வண்டு வளங்கிளரும் நீள் சோலை வண்பூங்கடிகை" என்று பேயாழ்வார் பாடியுள்ளார். ஸ்தல வரலாறு (சின்ன மலை): இந்திரத்யும்னன் என்ற மன்னன், அரக்கர்களுடன் போர் புரிந்து வெற்றி அடைய நரசிம்மரின் அருளை வேண்டினான். நரசிம்மர், ஆஞ்சநேயரிடம் தனது சங்கு, சக்கரங்களைக் கொடுத்து, அரக்கர்களை அழித்து, அரசனுக்கு உதவுமாறு பணித்தார். அதன்படி, அரக்கர்களை அழித்து இந்திரத்யும்னனுக்கு உதவுகிறார் ஆஞ்சநேயர். மலையிலுள்ள தடாகத்தில் சங்கு, சக்கரங்களை அலம்பி, அதைத் திரும்ப ஒப்படைக்க, நரசிம்மரிடம் சென்றார் ஆஞ்சநேயர். ஆனால், நரசிம்மர், "அதை ஆஞ்சநேயரே தன் வசம் வைத்துக்கொண்டு சிறிய மலையில் எழுந்தருளி, தரிசிக்க வரும் பக்தர்களை ரட்சிக்க வேண்டும்" என்று கூறிவிட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அந்த தடாகம் 'சக்ர தீர்த்தம்' எனும் பெயரில் உள்ளது. சின்ன மலையடிவாரத்திலுள்ள கொண்டபாளையத்தில் நிறைய சத்திரங்கள் உள்ளன. பிரார்த்தனைக்காரர்கள் இங்கு ஒரு மண்டலம் தங்கி, பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.
பெரிய மலை: 500 அடி உயரமும், 1400 படிக்கட்டுகளும் கொண்ட மலை. மூலவர்: யோக நரசிம்மஸ்வாமி, தாயார்: அம்ருதவல்லி. மூலவரான யோக நரசிம்மர், ஹேம கூட விமானத்தின் கீழ், யோக நிலையில், கிழக்கு நோக்கி, வீற்றிருந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சப்தரிஷிகளுக்கு ப்ரத்யட்சமானதாக ஐதீகம். இவரை அக்காரக்கனி பெருமாள் என்றும், தக்கான் (தயாளு) என்றும் திருமங்கை ஆழ்வார் போற்றுகிறார். 11 மாதங்கள் எப்போதும் யோக நிலையிலிருக்கும் யோக நரசிம்மர், 12வது மாதமான கார்த்திகையில் கண் திறந்து அருளுவதாக ஐதீகம். கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலை மோதும். பேய் பிடித்தவர்கள், மனோ வியாதி உள்ளவர்கள், நோயுற்றவர்கள், பில்லி சூன்யம், ஏவல் ஆகியவற்றால் பாதிப்படைந்தவர்களை குணப்படுத்தும் சிங்கபிரான் மிகுந்த வரப்பிரசாதி. தாயார் அம்ருதவல்லிக்கு வெள்ளிக்கிழமைகளில் பால், பஞ்சாம்ருதம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்கிறார்கள். மலை மேல் உள்ள பாறைத் தொட்டியில் 'தனகுண்டு' எனப்படும் தீர்த்தச் சுனையின் ஜலம் மிகவும் நன்றாக இருக்கும். பெரிய மலை அடிவாரத்தில் சற்றுத் தள்ளி 'தக்கான் குளம்' எனும் பிரம்ம தீர்த்தம் சுத்தமான ஜலம் கொண்டது. குளக்கரையில் உள்ள சந்நிதியில் வரதராஜப் பெருமாளை சேவிக்கலாம். தொட்டாச்சார்யாருக்கு கருட சேவை சாதித்ததாக ஐதீகம். உச்சி வேளையில் தரிசிக்கலாம். ஊர்க் கோவில்: பெரிய மலையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் ஊரில் உள்ள பெரிய கோவில் (மலை அடிவாரம்). இக்கோவிலில் யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தமான பக்தவத்ஸலன் சேவை சாதிக்கின்றார். பக்தனுக்கு உசிதமானவற்றை தருபவன் என்பதால் 'பக்தோசிகன்' என்ற திருநாமமும் உண்டு. பின்புறம் ஆதி கேசவப் பெருமாள். உற்சவத் தாயாராக சுதாவல்லி எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். தொட்டாச்சார்யார் அவதார ஸ்தலம். சிறிய மலை: 200 அடி உயரம், 406 படிக்கட்டுகளைக் கொண்ட மலை. மூலவர்: ஸ்ரீ யோக ஆஞ்சநேயர். ஸ்ரீ யோக ஆஞ்சநேயர், நரசிம்ம மூர்த்தியைப் பார்த்த வண்ணம் யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். சங்கு, சக்கரம் ஏந்திய மேற்கரங்கள் மற்றும் ஜபமாலை, ஜபசங்க்யை முத்திரை கொண்ட கீழ்க்கரங்கள் ஆகியவற்றுடன் கூடிய சதுர்புஜங்கள் கொண்ட அழகிய திருமேனி. இங்கு ஹனுமனுக்காக ஸ்ரீ ராமரும், ஸ்ரீ ராமருக்காக ஸ்ரீ ரங்கநாதரும் எழுந்தருளியுள்ளனர். ரங்கநாதன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். சிறிய மலையிலிருந்து பார்த்தால், ஹனுமன் சந்நிதிக்கு நேராக நரசிம்மர் காட்சியளிக்கும் விதத்தில் பெரிய மலை அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.