அருள்மிகு ஸ்ரீ பார்க்கவேஸ்வரர் திருக்கோவில்
God Name : ஸ்ரீ பார்க்கவேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
பார்க்கவன் என்றழைக்கப்படும் அசுரகுரு சுக்ராச்சார்யார் இவ்விறைவனை வழிபட்டு பூஜித்து வந்தமையால் பார்க்கவேஸ்வரர், வெள்ளீஸ்வரர் ஆகிய திருநாமங்கள் கொண்டார். இறைவன் காமாட்சிக்கு பிரத்யட்சமான இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட கோவில் என்பர்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பார்க்கவேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். இவரை வெள்ளீஸ்வரர் என்றும் அழைப்பார்கள். நாகாபரணங்களோடு கம்பீரமாக தரிசனம் தருகின்றார்.
நந்தியம்பெருமானுக்கு முன்பாக உள்ள மேடையில் காமாட்சி தேவியின் பாதங்கள் பதிந்த சுவடுகளை வழிபடுகின்றனர். அம்பிகைக்கு என்று தனி சந்நிதி இல்லை. இதுதான் அம்பிகை நின்ற இடம் என்பர்.
மாங்கனியை கையினில் ஏந்தி தரிசனம் தரும் விநாயகரும், ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட வள்ளி - தேவசேனா சமேத முருகனும் மிகவும் அழகான திருவுருவங்கள். கோஷ்ட தெய்வங்களுள் விசேஷமான ஆதி துர்க்கை வித்தியாசமான அழகு. மகிஷனை சம்ஹாரம் செய்வதற்கு முன்பான தோற்றம் என்பதால் காலடியில் மகிஷம் இல்லை.
வெளிப்பிரகாரத்தில் கங்காதரேஸ்வரர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, கால சம்ஹார மூர்த்தி ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
சென்னை - நவகிரக ஸ்தலங்களுள் ஒன்று - சுக்கிர ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.