அருள்மிகு வைத்தீஸ்வரன் திருக்கோவில் (பிள்ளைப்பாக்கம்)
God Name : வைத்தீஸ்வரன்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
உடல் நலம் குன்றியதால், இவ்வாலயத்து அர்ச்சகர் தன் மகனை சிவபூஜை செய்யுமாறு பணித்தார். வீட்டிலிருந்து கோவிலுக்கு போகும் வழியில் சிறுவனை பாம்பு ஒன்று தீண்டி விடுகிறது. வழியிலேயே சிறுவன் உயிர் நீத்தான். பதறி துடித்துப் போன அர்ச்சகர், இறந்த மகனை ஸ்வாமி சந்நிதி முன் கிடத்தி புலம்பினார். அப்போது திடீரென எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு பசு, அரவம் தீண்டிய பகுதியை தனது நாக்கால் நக்கி, நஞ்சை அகற்றியது. பிள்ளையும் பிழைத்தெழுந்தான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. பசு உருவில் வந்த இறைவன் பிள்ளை நக்கீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். இவ்வூர் பிள்ளை நக்கி பாக்கம் என்றிருந்து நாளடைவில் மருவி பிள்ளைப்பாக்கம் என்றானது.
மூலவர்: வைத்தீஸ்வரன், அம்பாள்: தையல் நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக வைத்தீஸ்வரன் எழுந்தருளியுள்ளார். அக்னீஸ்வரமுடைய மஹாதேவர், பிள்ளை நக்கீஸ்வரர் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. அம்பாள் தையல் நாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்க்கை ஆகிய திருவுருவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.