அருள்மிகு பூரி ஜெகந்நாதர் திருக்கோவில் (காணாத்தூர் ரெட்டிக்குப்பம்)
God Name : மூலவர்: ஸ்ரீ ஜெகந்நாதர்் உற்சவர்கள்: ஜெகந்நாதர், பலராமன்.
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
இவ்வாலயத்து கோபுரம், சிற்பங்கள் யாவும் பூரி ஜெகந்நாதர் கோவிலைப் போன்றே உள்ளன. அதே சிற்பியைக் கொண்டு உருவாக்கியதாக கூறுகின்றனர். நித்ய பூஜைகள், விழாக்கள், ரத உற்சவம் அனைத்தும் பூரி சம்ப்ரதாயமாகவே உள்ளன.
22 படிகள் ஏறிச் சென்று பிரதான கருவறையை அடைய வேண்டும். ஜயா, பிஜயா - துவார பாலகர்கள்.
விசாலமான கருவறையின் பீடத்தில் ஸ்ரீ ஜெகந்நாதர், பலபத்ரர், சுபத்ரா தேவி, சுதர்ஷன், மாதவன் ஆகியோரின் அழகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். உற்சவ மூர்த்தங்களான ஜெகந்நாதர், பலராமன், சுபத்ரா ஆகிய திருவுருவங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.
விதானத்தில் வண்ண ஓவியங்கள் அழகு சேர்க்கின்றன. தச திக் பால யந்திரம், அனந்த சயனம் போன்றவைகள் மிகவும் அழகாக இருக்கின்றன.
ஒரே கருவறையில் பட்ட கணேசர், ந்ருத்ய கணேசர், காஞ்சி கணேசர் ஆகிய மூன்று பிள்ளையார் திருமேனிகளை தரிசிக்கலாம். காஞ்சி கணேசர் - காஞ்சி மஹா பெரியவரால் கொடுக்கப்பட்டது என்பர்.
தாரா பாத்திரத்தின் நீர்த் துளிகள் வீழ்ந்து, குளிர்ந்த திருமேனியுடன் காட்சி தரும் காசி விஸ்வநாதர், நவக்ரகங்கள், மா பிமலா தேவி, லட்சுமி தேவி ஆகியோரை வலச்சுற்றில் தரிசிக்கலாம்.
ஆல்-அரசு-வேம்பு - மூன்றும் இணைந்து கல்பதரு எனும் விருட்சமாக செழித்தோங்கி நிற்கின்றது. அதைச் சுற்றிலும் தெய்வ வாகனங்கள், சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாலயத்து கோபுரம், சிற்பங்கள் யாவும் பூரி ஜெகந்நாதர் கோவிலைப் போன்றே உள்ளன. அதே சிற்பியைக் கொண்டு உருவாக்கியதாக கூறுகின்றனர். நித்ய பூஜைகள், விழாக்கள், ரத உற்சவம் அனைத்தும் பூரி ஸ்தலத்து சம்ப்ரதாயமாகவே உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.