முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரம்மனிடம் தர்க்கம் செய்து, அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரம்மனை சிறை பிடிக்கிறார் முருகன். பிரம்மனை விடுவிக்கக் கோரி தேவர்கள் வந்தபோது, அவர்களைத் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் (சிவன்) நேரில் சென்று முருகனுக்கு எடுத்துரைத்து பிரம்மனை விடுவிக்கச் செய்தார்.
தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். அந்த சிவலிங்கமே தேவசேனாபதீஸ்வரர் என ஸ்தல வரலாறு.
இவ்வாலயத்து கச்சியப்ப சிவாச்சாரியாரைக் கொண்டு "திகடச் சக்கரம்" என அடியெடுத்துக் கொடுத்து கந்த புராணம் எழுதுமாறு முருகன் பணித்த ஸ்தலம்.
பிரளய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்கள் எல்லாம் எங்கே போயின என வினவ, 'என் வயிற்றுக்குள் அடக்கம்' என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாஸத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து உருகும் உள்ளத்தான் என்ற திருநாமம் பெற்றார் என ஸ்தல வரலாறு.
மூலவர்: சுப்ரமண்யஸ்வாமி, உற்சவர்கள்: வள்ளி-தெய்வயானை.
நுழைவாயிலில் காட்சி தரும் விநாயகப் பெருமானின் மிகப் பெரிய திருவுருவத்தை தரிசித்து ஆசி பெற்று பின்னர் ஆலயத்துள் செல்கின்றனர்.
மூலவர் சுப்ரமண்ய ஸ்வாமி ருத்ராட்ச மாலையும், கமண்டலமும் கைகளில் கொண்டு தரிசனம் தருகிறார்.
இடப்புறமும், வலப்புறமும் வள்ளி - தெய்வானை தேவியர்கள் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர்.
அனந்தசுப்ரமண்யர் என்கிற நாகசுப்ரமண்யரின் உலாத் திருமேனி இத்தலத்தின் சிறப்பு மூர்த்தம்.
இரு கரங்களில் வலக்கரம் அபயமாகவும், இடக்கரம் ஊரு முத்திரையும் கொண்ட எழில் தோற்றம்.
ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் நின்றுள்ளது. வள்ளி - தெய்வானை உலாத் திருமேனிகளுக்கும் நாகம் குடை பிடிக்கும் அமைப்பு.
சந்தான கணபதியின் திருவுருவம் அழகாக இருக்கிறது.
ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும், காமாட்சி அம்மன் கோயிலுக்கும் நடுவில் இக்கோவில் இருப்பதால் இது சோமஸ்கந்தரை பூர்த்தி செய்வது போல் உள்ளது.
கச்சியப்பருக்கு பெருமை சேர்க்கும் பீடம். எதிரே முருகப்பெருமான் தெற்கு நோக்கி இருக்கின்றார்.
வள்ளலாருக்கும் தனி சன்னிதி இருக்கின்றது.
ஒன்றையொன்று பார்த்த வண்ணம் காணப்படும் நவக்கிரகங்கள் வித்தியாசமானது.
நவவீரர்களின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன.
தவம் இயற்றும் பிரம்மசாரியாக முருகன் இங்கு தோற்றமளிப்பதால், வள்ளி தெய்வானை தேவியர்கள் பிரகாரத்தில் தனியாக எழுந்தருளியுள்ளனர்.
தீபாவளி நீங்கலாக ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்விக்கின்றனர்.
தேன் அபிஷேகம் பிரியமானது.
இவ்வாலயத்து கச்சியப்ப சிவாச்சாரியாரைக் கொண்டு "திகடச் சக்கரம்" என அடியெடுத்துக் கொடுத்து கந்த புராணம் எழுதுமாறு முருகன் பணித்த ஸ்தலம்.
தேவசேனாபதீஸ்வரம்:
(முருகப் பெருமானின் கருவறையின் எதிரில் தனிக் கட்டடமாக உள்ளது)
மூலஸ்தானத்தின் மூலவராக தேவசேனாபதீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சிவலிங்க ஸ்வரூபமாக.
மூலஸ்தானத்து மேல் விமானத்தில் முருகனும், திருமாலும் இவ்விறைவனை வணங்கும் சிற்பத்தை அழகாக வடித்துள்ளனர்.
உருகும் உள்ளப் பெருமாள் சந்நிதி:
(குமரக்கோட்டத்துக்குள் அமைந்துள்ள சந்நிதி. முருகப்பெருமான் பள்ளியறையை அடுத்துள்ளது.)
மூலவர்: உருகும் உள்ளப் பெருமாள். தாயார்கள்: ஸ்ரீ தேவி, பூ தேவி தேவியர்கள், மற்றும் மார்க்கண்டேய முனிவர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.