அருள்மிகு செங்கண்மாலீஸ்வரர் திருக்கோயில் (செங்கண்மால்)
God Name : செங்கண்மாலீஸ்வரர்
ரஞ்சன்குடி கோவில்
திருவாரூர்
Call : +91-
விஷ்ணுமூர்த்தியை செங்கண்மால் என்று அழைப்பார்கள். விஷ்ணு பூஜித்த லிங்கம் என்பதால் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. 1008 மலர்களைக் கொண்டு விஷ்ணு இவ்விறைவனை பூஜித்து வழிபடலானார். அதில் ஒரு மலரை மறைத்து விட்டார். தன்னையே மலராக அர்ப்பணித்து பூஜையை நிறைவு செய்தார் விஷ்ணு எனத் தல வரலாறு கூறுகிறது. கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் புத்திர பாக்கியம் வேண்டி கட்டிய கோயில் என்பதால் இப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. கோச்செங்கண்ணன் அவனது தாயின் வயிற்றில் இருக்கும்போது, குழந்தை சிறிது நேரம் தாமதித்துப் பிறப்பதே நல்லது என ஜோதிடர்கள் கூறியதால், அவனுடைய தாய் தனது கால்களை மேலே தூக்கி வைத்துக் கொண்டு தலைகீழாக நின்று, குழந்தை பிறக்கும் நேரத்தைத் தாமதப்படுத்தினாள். குழந்தை தாமதித்து பிறந்தது. ஆனால் தாய் இறந்து போனாள். அதனால் பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்தே இருந்தன. சிகப்பான கண்களை உடையவன் என்பதால் கோச்செங்கண்ணன் எனப் பெயர் கொண்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது.
மூலவர்: செங்கண்மாலீஸ்வரர், அம்பாள்: பிரஹந்நாயகி. மூலஸ்தானத்தில் செங்கண்மாலீஸ்வரர் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். கிழக்கு நோக்கிய சந்நிதி. அம்பாள் பிரஹந்நாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். தெற்கு நோக்கிய சந்நிதி. செல்வ விநாயகர், பிரம்மா, துர்க்கை, தட்சிணாமூர்த்தி மற்றும் சுப்ரமண்யர் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.