ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேய ஆஸ்ரமம் (செங்காடு பூந்தோட்டம்)
God Name : ஸ்ரீ யோக ஆஞ்சநேயர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
மயிலை வீர ஆஞ்சநேயர் கோவிலைச் சேர்ந்த சக்ரவர்த்தி ஸ்வாமிகளின் வழிகாட்டுதலுடன், சென்னை ராஜ்மோகன் தம்பதியினர் ஸ்தாபித்த ஆலயம். (9.7.2003 அன்று மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது). நித்ய பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடத்துகின்றனர். கற்பூரம்/ஊதுபத்தி ஏற்றப்படுவதில்லை. ஆலயத்திற்குள் பிளாஸ்டிக் பைகள் அனுமதியில்லை. கேமரா அனுமதியில்லை. உண்டியல் இல்லை.
கிழக்கு நோக்கிய ஆலயம். அழகிய நந்தவனத்தின் நடுவே ஸ்தாபித்துள்ளனர். வட்ட வடிவம் கொண்ட மூலஸ்தானம். சடாரி வடிவில் விமானத்தை அமைத்துள்ளனர். மூலஸ்தானத்தில் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் மோனத்தவம் மேற்கொண்டு, கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சங்கு-சக்கரதாரியாக விளங்கும் இவரது அழகிய திருமேனியை பார்த்துக் கொண்டே இருக்கலாம். மிகவும் சக்தி வாய்ந்த வரப் பிரசாதி எனப் போற்றப்படுபவர். பின்னணியில் ஸ்ரீ ராமர், சீதா பிராட்டி, லக்ஷ்மணன், மற்றும் ராமபக்த ஹனுமன் ஆகிய திருவுருவங்கள் எழுந்தருளியுள்ளனர். யோக ஆஞ்சநேயருக்கு நேர் எதிரேயுள்ள ஸ்ரீ யோக நரசிம்மர் தேஜோமய திருமேனி கொண்டுள்ளார். ஸ்ரீ நாராயணரின் திருவுருவமும் சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.