அருள்மிகு வீரபத்ரஸ்வாமி திருக்கோவில், அனுமந்தபுரம்
God Name : ஸ்ரீ வீரபத்ரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
அரன் மைந்தனாகிய வீரபத்ரர் கோவில் கொண்டுள்ளதால், அரன்மைந்தபுரம் எனப் பெயருற்று பின்னர் மருவி அனுமந்தபுரம் என்றானது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீரபத்ரர் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். எட்டடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. மேற்கரங்களில் வில்-அம்பு கொண்டும், கீழ்க்கரங்களில் கத்தி-கேடயம் கொண்டும் காட்சி தருகின்றார். திருமுடியில் சிவலிங்கமும், வலது காலருகே தட்சனும் காணப்படுகின்றனர். கிழக்கு நோக்கிய சந்நிதியில் பத்ரகாளி தரிசனம் தருகின்றாள். சக்தி வாய்ந்த வரப்பிரசாதி என்பர். பிள்ளையார், முருகன், துர்க்கை, பத்ர சண்டீசர் ஆகிய திருவுருவங்களையும், உலாத் திருமேனிகளையும் தரிசிக்கலாம். வெண்ணெய்க் காப்பு சாத்து, வெற்றிலைப் படல் சாத்து ஆகிய வேண்டுதல் பிரார்த்தனைகள் இங்கு நடைபெறுகின்றன. கோபத்தில் இருக்கும் வீரபத்ரரை சாந்தி செய்ய வெண்ணெய்க் காப்பு செய்கின்றனர். சுவாமியைச் சுற்றி பிரபையில் வெற்றிலையைப் பொருத்தி அலங்காரம் செய்வது வெற்றிலைப் படல் எனப்படும். இது வீரபத்ரருக்கு உகந்த சிறந்த பிரார்த்தனை என்பர். (6400 வெற்றிலைகள் படல் செய்வது அரை வெற்றிலைப் படல் எனப்படும். 12800 வெற்றிலைகள் படல் செய்வது முழு வெற்றிலைப் படல் எனப்படும்.) ஆடிப் பூரமன்று வெற்றிலைப் படலத்திற்கு சிறந்த நாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.