அருள்மிகு கல்யாண ரங்கநாதர் திருக்கோவில் (குளத்தூர்)
God Name : ஸ்ரீ கல்யாண ரங்கநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
பொதுவாக, ரங்கநாதரை பள்ளிக்கொண்ட ரங்கநாதராக சயனக் கோலத்தில் சேவித்திருக்கும் சேவார்த்திகளுக்கு, இங்கு நின்ற கோலத்தில் சேவை சாதிப்பது விசேஷமான சிறப்பாகும். திருமணக் கோலத்தில் சேவை சாதிப்பதால், கிடந்த நிலையில் இல்லாமல், நின்ற நிலையில் சேவை சாதிப்பதாக ஐதீகம். 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இவ்வாலயத்தில் எம்பெருமானுக்கு நித்ய திருவாராதனம் மற்றும் உற்சவங்களை சிறப்புற செய்து வருகின்றனர். திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாளின் அபிமான ஸ்தலம் என்பர். பரிவேட்டை உற்சவத்தின்போது நித்ய கல்யாணப் பெருமாள் இங்கே எழுந்தருளுகின்றார். ஸ்ரீ ரங்கநாயகி ஸமேத ஸ்ரீ கல்யாண ரங்கநாதப் பெருமாள் சந்நிதிக்கு இராஜகோபுரத்தை நிர்மாணம் செய்யும் பணிகளை கல்யாண ரங்கநாதர் கைங்கர்ய ட்ரஸ்ட் எனும் அமைப்பினர் துவக்கியுள்ளனர். பெருமாளின் அனுக்ரஹத்துடனும், ட்ரஸ்ட்டின் இடைவிடாத பணிகளினாலும், சேவார்த்திகளுக்கு விரைவில் ராஜகோபுர தரிசனம் கிடைக்கவிருக்கிறது. மறுபடியும் ஸம்ப்ரோக்ஷணாதிகளை செய்யவிருக்கிறார்கள்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கல்யாண ரங்கநாதர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.