பெரியாண்டவர் திருக்கோவில் (திருநிலை)
God Name : திருநிலை பெரியாண்டவர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
சுந்தரபத்திரன் எனும் அசுரன் தவம் செய்து பல வரங்களைப் பெற்றிருந்தான். இதனால் மமதை கொண்டு அனைவருக்கும் தொல்லைகள் கொடுத்து வந்தான். தனது மரணம் சிவ-சக்தி ஸ்வரூபமான ஒருவரால் மட்டும் சம்பவிக்க வேண்டும் என்றும், அவர் மனித அவதாரமும் எடுத்திருக்க வேண்டும் என்றும், வரத்தைப் பெற்றிருந்தான். இவனது இம்சைகளை பொறுக்க முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
அசுரனை சம்ஹாரம் செய்ய உடனே புறப்படும்படி உமையவளுக்கு கட்டளையிட்டார் சிவபெருமான். கண்களை மூடி தியானத்திலருந்த அன்னை பதில் ஏதும் கூறாமலும் மௌனமாக இருந்தார். இதனால் கோபமுற்ற சிவபெருமான், பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறப்பாயாக என சபித்து விடுகின்றார்.
தியானம் கலைந்து கண் திறந்த அன்னை, என்னில் பாதியாக இருக்கும் தாங்களும் ஒரு நாழிகையாவது மனிதனாகப் பிறந்து பூமியில் அலைய வேண்டும் என சாபம் கொடுக்கின்றாள். இதனால் இறைவன் மனித அவதாரம் எடுத்து, தன் நிலை மறந்து, சித்தம் கலங்கி, பூமியில் அலைந்து திரிந்தார். அவரது நிலை கண்டு பார்வதியும், தேவர்களும் அச்சம் கொண்டனர்.
அன்னை பார்வதி தனது சூலாயுதத்தை தூக்கி வீசி எறிந்தாள். அது சென்று விழுந்த இடத்தில் பிரகாசமாக ஒளி வீசியது. அந்த ஒளியிலிருந்து சிவபெருமான் ஒரு நிலையாய் நின்று, திருநிலையாய் பாதம் பதித்து நின்றார். ஒரு நாழிகை கடந்ததால் மனித வடிவம் விடுத்து சிவபெருமானாக தோன்றினார். அன்னை பார்வதி அவரை வணங்கிய வண்ணம் தோன்றினாள். சூலாயுதம் விழுந்த இடத்தில் சிதறிய 21 மண் உருண்டைகள், 21 சிவ கணங்களாக மாறி, ஐயனை வணங்கி நின்றன.
மனிதனாக உலகை வலம் வந்து ஆண்டதால் பெரியாண்டவர் என்ற பெயர் கொண்டார். ஒரு நிலையாய் பாதம் பதித்த இடம் என்பதால் இவ்வூருக்கு திருநிலை எனப் பெயர் வந்தது. ஜோதியிலிருந்து தோன்றிய லிங்கம் என்பதால் தேஜோமயமாக இருக்கின்றார்.
தாயின் கருவிலிருந்து தோன்றாமல் சுயம்புவாக தோன்றியவர் பெரியாண்டவர் என்பதால் இத்தலத்தில் புத்திரபாக்கியம் வேண்டி நிற்பவர்களுக்கு உடனே பலன் கிடைக்கிறது.
மூலவர்: திருநிலை பெரியாண்டவர், அம்பாள்: திருநிலை நாயகி.
நுழைவு வாசலருகே ஒருபுறம் பிள்ளையாரும், மறுபுறம் சுப்ரமண்யரும் எழுந்தருளி ஆசி வழங்குகின்றனர்.
மூலஸ்தானத்தில் திருநிலை பெரியாண்டவர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். ஒளி வீசும் அழகிய திருமேனியும், உயரமான பாணமும் கொண்டுள்ளார். லிங்கத்திற்கு கவசமாகவும், குடையாகவும் ஐந்து தலை நாகம் உள்ளது.
சுயம்பு லிங்கத்தின் மேற்புறம் மனித உருவில் பரமசிவன், அருகே அன்னை பார்வதி. அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபம்.
சுயம்பு லிங்கத்தை சுற்றிலும் இருபத்தோரு சிவகணங்கள் மூலவரை வணங்கியபடி, செவ்வக வடிவில் நிற்கின்றன.
பெரியாண்டவரின் வலது புறமாக அங்காள பரமேஸ்வரி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். அற்புதமான வண்ண சுதைச் சிற்பம். சுதைச் சிற்பங்களாக (ஸ்டக்கோ இமேஜ்) அர்த்தநாரீஸ்வரர், சிவ-சக்தி வடிவங்கள், மிகப் பெரிய திருவுருவமாக பெரியாண்டவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
சிவபெருமான் மற்றும் பார்வதியின் பாதங்களின் வடிவங்கள் தரிசனத்திற்காக வைத்துள்ளனர். மனித உருவில் வந்த நந்தியும் பார்க்க அழகாக உள்ளது. கோபுரத்தின் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், வடக்கில் பைரவரும் எழுந்தருளியுள்ளனர்.
சித்தி புத்தி விநாயகர், வள்ளி-தெய்வயானை சஹித முருகப் பெருமான், நாகாத்தம்மன், பூதிப் பிள்ளையார் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
ஒரு புறம் குளமும், மறு புறம் ஏரியும், சுற்றிலும் வயல்களும், பசும் சோலைகளும் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள கோவில். கிழக்கு முகமாக வாசல் கொண்டுள்ளது.
இவ்வூரின் அருகேயுள்ள ஓரகடத்தில் ஒரு குன்றின் மீதுள்ள சிவாலயத்தில் வாடாமல்லீஸ்வரரும், அமிர்தவல்லியும் அருள்புரிகின்றனர். கோதண்டராமர் கோவில் ஒன்றும் அருகே உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.