அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் (செய்யூர்)
God Name : கந்தசாமி எனப்படும் ஆறுமுகப் பெருமான்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஆறுமுகப் பெருமான் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். இவர் கந்தசாமி என்ற திருநாமத்தைக் கொண்டுள்ளார். வள்ளி-தெய்வானை தேவியர்கள் உடன் உள்ளனர். துவார பாலகர்களாக சுவீரன், சுஜானன் எழுந்தருளி காவல் புரிகின்றனர். கோஷ்டத்தில் நிருத்த ஸ்கந்தர், பிரம்ம சாஸ்தா, பாலஸ்கந்தர், சிவகுருநாதர், புளிந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தென்மேற்கு மூலையிலுள்ள சந்நிதியில் சம்ஹார மூர்த்தியான முத்துக்குமார சுவாமி எழுந்தருளி அருள் புரிகின்றார். உற்சவ மண்டபத்தில் சோமநாத சுவாமியையும் அன்னை மீனாட்சியையும் தரிசிக்கலாம். பிரகார வலச்சுற்றில் விநாயகர், சண்டேசர், கைலாசநாதர், பிரம்மா, விஷ்ணு, வீரபாகு தேவர் மற்றும் தண்டபாணி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சுவரிலுள்ள சிற்பங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. 27 நட்சத்திரங்கள் கைகூப்பி வழிபடுவதை சித்தரிக்க 27 பூதகணங்களின் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளதாக அர்ச்சகர் தெரிவித்தார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.