ஸ்ரீபீடபுரம் (காஞ்சி)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

ஆதி பீட பரமேஸ்வரியான காளியம்மன் இங்கு காவல் தெய்வமாக வீற்றிருக்கின்றாள். காளி தேவியால் காக்கப்படுவதால் காஞ்சிக்கு கன்னிக்காப்பு என்ற பெயரும் உண்டு. இவர் காஞ்சி மாநகரை காத்து வந்த அஷ்ட காளிகளில் ஒருவர். முன்னாளில் இந்த காளியை யந்திர பீடத்தின் வடிவாக வழிபட்டனர். அதனால் இவ்வூர் ஸ்ரீ பீடபுரம் என்றழைக்கப்பட்டது. இந்த காளியம்மனை பீடாபுரத்தி என்று காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யோகப் பிடாரி) இங்கு யாகம் புரிந்த காளிக்கு பிரத்யட்சமான காளிக்கு அருள் பாலித்ததாக கூறப்படுகின்றது.
மூலஸ்தானத்தில் மஹாகாளியம்மன், பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில், உக்கிரம் ஏதுமில்லாமல் சாந்த ஸ்வரூபிணியாக தரிசனம் தருகிறாள். சிரசில் ஜடாமுடியும், பாசம், அங்குசம், அபயஹஸ்தம், கபால ஓடு ஆகியனவும் கொண்ட சதுர்புஜங்களுடன் காட்சி தருகிறாள். அசப்பில் காமாட்சியின் வடிவத்தில் இருப்பதால் ஆதி காமாட்சி என்றே அழைக்கின்றனர். சந்நிதி முகப்பில் ஸ்ரீ சக்கர யந்திரம் உள்ளது. காலையில் ஸ்ரீ சக்கரத்திற்கு பூஜை செய்த பின்னரே அம்பிகைக்கு பூஜை செய்வார்கள். யந்திர பீடம் கொண்ட அர்த்த மண்டபத்தின் வாசலில் இரு துவார பாலிகைகள் கைகளில் கத்தியும், கபாலமும் ஏந்தி காட்சி தருகின்றார்கள். காளிகாம்பாள் அமர்ந்துள்ள பீடத்தில் மூன்று சிரசுகள் காணப்படுகின்றன. (கம்பன், நிகம்பன், மகிஷன் ஆகிய அசுரர்களின் தலைகள்) முன் மண்டபத்தில் சக்தி லிங்கத்தை தரிசிக்கலாம். லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் உள்ளது. இதை அர்த்தநாரீஸ்வர லிங்கம் என்று அழைக்கின்றனர். வெளியே உள்ள உற்சவ மூர்த்தியின் இருபுறமும் லஷ்மி மற்றும் சரஸ்வதியின் திருவுருவங்களை காணலாம். கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராஹ்மி, துர்க்கை ஆகிய மூர்த்தங்களையும், பிரகாரத்தில் மடாலீஸ்வர லிங்கம், நாகர், மகிஷாசுரமர்த்தினி ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். வீர்ய லட்சுமி தனி சந்நிதி கொண்டுள்ளார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.