அருள்மிகு சத்யநாதஸ்வாமி திருக்கோவில் (காஞ்சி)

God Name : சத்ய வ்ரதேஸ்வரர்

Call : +91-

காரை முட்செடிகள் மிகுந்து காணப்பட்ட பகுதியானதால் காரைக்காடு என வழங்கப்பட்டது. தற்போது திருக்காலீஸ்வரன் கோவில் என அழைக்கப்படுகின்றது. வேப்ப மரங்களும் அடர்ந்து இருந்தமையால் திருக்குளம் வேப்பங்குளம் என்று அழைக்கப்படுகின்றது. நல்ல தண்ணீர். சந்திரனுக்கும், தாரைக்கும் பிறந்த புதன் இவ்விறைவனை வழிபட்டு கிரக பதவி பெற்றதாக வரலாறு. புத கிரக தோஷ நிவர்த்தி பெற பக்தர்கள் வருகின்றனர். கௌதம மகரிஷியின் மனைவி அகல்யா மீது ஆசை கொண்ட தேவேந்திரன், அவளை அடைய எண்ணி வஞ்சகமான திட்டத்துடன், சேவல் உருவம் கொண்டு கூவினான். பொழுது விடிந்ததென எண்ணிய கௌதமர் ஆஸ்ரமத்தை விடுத்து நீராடச் சென்றார். அவர் சென்றவுடன், சேவல் உருவில் இருந்த இந்திரன் கௌதமரின் தோற்றம் கொண்டு அகல்யாவிடம் சென்றான். இந்நிகழ்ச்சியை தனது தவ வலிமையினால் தெரிந்து கொண்ட மகரிஷி சினமுற்று இருவரையும் சபித்தார். அகல்யா கல்லாக மாறினாள். இந்திரன் உடல் முழுதும் கண்கள் பெற்றான். தவற்றிற்கு வருந்தியும், சாப விமோசனம் பெற வேண்டியும், இத்தலத்திற்கு வந்த இந்திரன் இவ்விறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு.
மூலவர்: சத்ய வ்ரதேஸ்வரர், உற்சவ அம்பாள்: பிரம்மராம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் சத்ய வ்ரதேஸ்வரர். சுயம்பு லிங்கம். லேசான செம்மண் நிறத்தில், சற்று உயரமான பாணம் கொண்டு கம்பீரமாகக் காட்சி தரும் அழகிய திருமேனி. காரைத்திருநாதர் என்ற திருநாமமும் உண்டு. உற்சவ அம்பாளாக பிரம்மராம்பிகை என்கிற சுந்தராம்பிகை எழுந்தருளியுள்ளார். திருக்கரத்தின் ரேகைகளுக்கு இடையே மீன் சின்னம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் அழகாக உள்ளது. ஏழு சீடர்களுடன் காணப்படுகிறார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.