அருள்மிகு அனேகதங்க பாடலேஸ்வரர் திருக்கோவில் (காஞ்சி)

God Name : அனேகதங்காவதேஸ்வரர்

Call : +91-

இரண்யபுரத்தை ஆண்ட கேசி எனும் அசுரனுக்கு, கணேச சக்தியான வல்லபை மகளாகப் பிறந்தாள். சிவ பக்தையான வல்லபை செய்யும் சிவ வழிபாட்டை பொறுக்காத கேசி, அவளை அடிக்கடி ஒளித்து வைக்கலானான். ஒளித்து வைக்கப்பட்ட அவளை வெளிக் கொணர, கேசியுடன் போரிட வேண்டும். யானை பலம் கொண்டிருந்து, யானை அல்லாத ஒன்றால் மட்டுமே தன்னை அழிக்க முடிய வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவன் கேசி. இதனால் கணேசர் இங்கு லிங்கம் ஒன்றை அமைத்து பூஜிக்கலானார். பிரத்யட்சமான சிவ பெருமானிடம் ஒளித்து வைக்கப்பட்ட வல்லபையை மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அனேகபம் வழிபட்ட லிங்கத்திற்கு அனேக பலமும், அனேகப பலமும் சேர்ந்து அனேகபநாதராக சென்று, கேசியை வென்று, வல்லபையை வெளிக் கொணர்ந்தார் சிவபெருமான். வல்லபையை திருமணம் செய்து கொண்டு ஸ்ரீ வல்லபை விநாயகரானார் கணபதி. இமயமலைச் சாரலில் உள்ள கேதார்நாத்துக்கும் அனேகதங்காவதம் என்ற பெயர் இருப்பதனால், இத்தலத்தை கச்சி அனேகதங்காவதம் என்று குறிப்பிடுகின்றனர். காடவர்கோன் எனப்படும் இரண்டாம் நரசிம்ம பல்லவன் ஆகிய ராஜசிம்மன் கட்டிய கோவில். 1350 ஆண்டுகட்கு முற்பட்ட பழமையான கோவில்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் அனேகதங்காவதேஸ்வரர். ஒளி வீசும் அழகிய பெரிய திருமேனியும், வட்ட வடிவ ஆவுடையாரும் கொண்டு தரிசனம் தருகிறார். 'அனேகபம்', 'அனேகதம்' போன்ற வார்த்தைகள் யானையைக் குறிக்கும். அனேகப முகத்துடன் கணபதி பூஜித்த லிங்கம் என்பதால் அனேகபநாதர் என்ற திருநாமம் கொண்டார். யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவரின் கோவில் ஆனை உரித்தான் வயலருகே இருப்பது பொருத்தமே. இத்தலத்தின் போக-யோக சக்தியாக ஸ்ரீ காமாட்சியே விளங்குவதால் தனியாக அம்மன் சந்நிதி இல்லை. பிரகார வலச் சுற்றில் விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய மயிலேறும் முருகப் பெருமான், மற்றும் கோஷ்ட மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.